உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




196

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

நாலடியார் திருவாசகம் ஆகிய தமிழ் மூலப்படிகள் மூன்றும் மேலுறையும் முகப்பும் இல்லாமல் சிதைந்த நிலையில் ஒழிப்பதற்கு எடுத்துவைக்கப் பெற்றிருந்த போது யான் சென்று கேட்டமை யால் கிடைக்கப் பெற்றனவாகும்" என்கிறார் திரு.வ.சு. தாம் தொகுத்தவற்றைக் காப்பதற்குரிய வாய்ப்புகள் என்ன? எனின் அவர்களே கூறுகின்றனர்: "நூல்களைக் கட்டஞ் செய்தற்கெனத் தொழிற்கூடமும், நூல்களை அச்சிடுதற்கென அச்சுக்கூடமும் கழகத்திலே இருக்கின்றமையால்எந்த நிலையில் நூல்களோ மலர்களோ இதழ்களோ கிடைக்கப் பெறினும் செம்மை செய்து அவை போற்றப் பெறுகின்றன. திரும்ப அச்சிட வேண்டிய பயனுள்ள பழைய நூல்களும் அச்சிட்டு வெளியிடப் பெறுகின்றன.

6

வ.சு. அவர்களின் தொகுப்புப்பயனை ஒரு சான்றால் விளக்கலாம். எழுதிய ஆசிரியரிடமே இல்லாத நூல், வெளியிட்ட பதிப்பகத்தினிடமே இல்லாத இதழ், புலவர் வழியிலே வந்த குடும்பத்திலே இல்லாத புலவர் படம் - மறைமலையடிகள் நூல் நிலையத்திலே உண்டு; அதுவும் நினைத்தவுடன் கையிலே உள்ள கனியென - கட்டிப்பாகென எடுத்துச் சுவைக்கத்தக்க நிலையிலே உடனே தேடி வந்து நிற்கும்நிலையும்உண்டு.

அவர் (திரு.வ.சு.) பலர் கருதுகின்றவாறு தமிழிலும் ஆங்கிலத்திலும் தமிழ்ச் சார்பான பொத்தக அல்லது நூல் வெளியீட்டாளர் மட்டுமல்லர். இதுவரை அச்சோறாத ஏட்டுச் சுவடி, கையெழுத்துச் சுவடித் தொகுப்பாளரும், புது நூல் இயற்றுவிப்பாளரும், புலவர், வெளிநாட்டுத் தமிழ்த் தொண்டர் முதலியோர் வரலாற்றுத் தொகுப்பாளரும், அவர் கையெழுத்துப் படித் தொகுப்பாளரும், அவர் உருவப்படத் தொகுப்பாளரும், பெரும்புலவர் கடிதப் போக்குவரத்துத் தொகுப்பாளரும், மாநாடுகளின் நடவடிக்கைத் தொகுப்பாளரும், நின்றுபோன பழைய செய்தித்தாள், கிழமையன், மாதிகை, காலண்டிதழ், ஆண்டு மலர் முதலிய தொகுப்பாளரும், பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நாலடியார் திருவாசகம் முதலிய நூற்றொகுப்பானரும் ஆவர்."

பாவாணர்