198
இளங்குமரனார் தமிழ்வளம் - 27
திரு.வ.சு. பயின்ற பள்ளியில் அடுத்தடுத்த வகுப்பில் பயின்ற மாணவர் சொல்லின் செல்வர் திரு. சேதுப்பிள்ளை. அவர் குடியிருப்பும் இவர் வீட்டுக்கு அண்மையிலேயே இருந்தது. அன்றியும் பிள்ளைப்பருவ விளையாடல்களில் ஒன்றுபட்டும் ஆடினர். அத்தகைய அன்பு நண்பர் சேது நான்காம் படிவத்தில் பயிலும் போது அவருக்குத் திருக்குறள் உரையொடு கூடிய நூல் ஒன்று பரிசாகக் கிடைத்தது. அந் நூலை வைத்துச் செப்பறை அடிகளாரிடம் முறையாகப் பாடமும் கேட்டார். அவர் தொடர்பும் தோழமையும் சுப்புவுக்குத் திருக்குறள் அன்பை வளர்த்தது.
சேதுப்பிள்ளை பயின்று பட்டம் பெற்றார். நாவன்மை சிறந்து விளங்கினார். 1920 ஆம் ஆண்டுக் கோடைவிடுமுறையில் நெல்லைக் கூத்த நயினார்பிள்ளை வீட்டுமாடியில் நெல்லை மாணவர் மன்றச்சார்பில் 'திருவள்ளுவரும் திருக்குறளும்' என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அப் பொழிவு செவிக்கு இன்பமும் சிந்தைக்கு விருந்துமாய்ச் சுவைபெற இருந்தது. அப் பொழிவு முடிந்தபின்னே, "உங்கள் உரை அருமையாய் அமைந்திருந்தது. அதனை நூல்வடிவில் கொண்டு வர வேண்டும் என்பது என் விருப்பம். ஆகலின் அதனை விரைந்து எழுதுங்கள்” என வேண்டுகோள் விடுத்தார். அத் தூண்டலால் வெளிப்பட்ட நூலே, திருவள்ளுவர் நூல்நயம் என்னும் சீரிய நூலாகும்.
இயல்பாகவே திருவரங்கர்க்குத் திருக்குறள் ஈடுபாடு மிக்கிருந்ததால் சிவஞானமுனிவர் இயற்றிய 'சோமேசர் முதுமொழி வெண்பா' நூலைத் திரு. வா. மகாதேவமுதலியார் உரையுடன் வெளியிட்டார். அது கழகத்தின் மூன்றாம் வெளியீடாகும். திருக்குறளுக்குப் புத்துரை காணவேண்டும் என்னும் வேட்கையால் மறைமலையடிகளார் நன்மாணவர் நாகை சொ. தண்டபாணிப்பிள்ளை அவர்களைத் தூண்டி எழுதுமாறு வேண்டினார். அதனைப் பல்கால் முயன்று தூண்டித் தம் எழுத்தரை விடுத்தும், தாமே சென்றும் உரையெழுதிச் செப்பமாக அச்சிட முயன்றார் திரு. வ. சு, ஆசிரியர் உடல் நலிவும் பின்னே நலிவு தீராது உலகில் இருந்தே அவர் விடுதலை பெற்றதும் அந்நூல் அறத்துப்பால் அளவுக்கே உரையுடன் வெளிவரச் செய்தன. இணையற்ற அருமையான அவ்வுரை