உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




204

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

திருக்குறள் மூலம், உரைப்பதிப்புகளே அன்றி ஆராய்ச்சி நூல் பதிப்புகளும் தேர்ந்து வெளிக்கொணர்ந்தார் திரு.வ.சு. திருக்குறள் பகுதிப்பதிப்புகளும், மாணவர்க்கேற்ற பாடத் தொகுப்புகளும் கொணர்ந்தார். “தெய்வப்புலவர் திருவள்ளு வர்", "திருவள்ளுவரும் சிவப்பிரகாசரும்", "திருவள்ளுவர் கதை", "வள்ளுவர் சொல்லமுதம்”, “முதற்குறள் உவமை”, "திருக்குறள் இன்பம்”, “திருக்குறள் சிந்தனை" முதலியவையும் பிறவும் அவ்வகையில் வந்தன.

போப்பையர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திருக்குறள், துரு ஐயர், இலாசரசு ஆகியோர் ஆங்கிலத்தில் பெயர்த்த திருக்குறள், சுத்தானந்த பாரதியார் இயற்றிய Tirukkural Coupletws ஆகிய நூல்களை வெளியிட்டார்.

எங்கும் எளிமையாகக் குறளைப் பரப்பவிரும்பித், திருக்குறள் தாலாட்டு, திருக்குறள் காவடிச்சிந்து, திருக்குறள் நூற்றெட்டு, சிறுவர்க்கான திருவள்ளுவர் நாடகம், வானொலியில் வள்ளுவர் ஓவியம், வளர்புகழ் வள்ளுவம், திருக்குறள் நாடகம் என இன்னபல நூல்களை வெளிப்படுத்தி வள்ளுவர் புகழை நாளும் பரப்பி ருகின்றார்.

மற்றும் 'குறள்கூறும் சட்டநெறி' காலத்துககேற்ற புதுத் துறை பூத்த வெளியீடாகும். 'திருக்குறள் சொற்பொருள் அகர வரிசை' என்னும் நூலும் ஆய்வாளருக்குப் பெரும்பயன் தரும் நூலாகும். 'திருக்குறள் குறுந்திரட்டு’, ‘திருக்குறள் பெருந்திரட்டு' என்பவை பள்ளிமாணவர்க்குப் பயன்படுபவை.

இனித் திருக்குறள் வகையில் ஆட்சியாளர் திரு.வ.சு. செய்துள்ள பிறபணிகளை நோக்குவோம்.

1008 ஆவது நூல் வெளியீட்டு விழாவின்போது அமைச்சர் திரு.எம். பக்தவத்சலம் அவர்கள். "முன்பெல்லாம் என்னைப் போன்ற படிக்காதவர்களுக்குச் சைவசித்தாந்தக் கழகம் என்றால் அவர்கள் வெளியிட்ட திருக்குறள் டைரிதான் தெரியும். அது ஆண்டுதோறும் வெளியிட்டுவரும் திருக்குறுள் டைரி ஓர் அரிய பணி. அது ஒன்றே போதும். குழந்தைக்குத் தேனில் சேர்த்து மருந்து கொடுப்பதுபோல அன்றாடமும் திருக்குறள் படிப்பதற்கு இந்த டைரியால் வாய்ப்பு ஏற்படுகிறது. டைரி எழுதும் பழக்கம் ஒரு ஃபாசனாக இக்காலத்தில் உள்ளது. அன்றாடம் டைரியில்