206
இளங்குமரனார் தமிழ்வளம் - 27
ள
1933 ஆம் ஆண்டில் திருக்குறள் தொடக்கத்தில் இருந்து முறையாக 365 குறள்களும் 1934 ஆம் ஆண்டில் அடுத்த 365 குறள்களும் 1935 ஆம் ஆண்டில் அடுத்த 365 குறள்களும் அமைக்கப்பெற்றன. 1936 இல் எஞ்சிய 235 குறள்களையும் அமைத்து மிகுந்த 131 பக்கங் களுக்குக் கலித்தொகையில் அமைந்துள்ள குறள் அமைப்புடைய வற்றைத் தொகுத்து அமைத்துக் கொள்ளப்பெற்றன. இவ் வகையால் திருக்குறள் முழுமையும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறையாகச் சுழற்சி வகையில் 12 சுற்றுச் சுற்றி நாட்குறிப்பு உலாக்கொண்டு, சிறக்கின்றதாம். நாட் குறிப்புப்போலவே திருக்குறள் நாட்காட்டியும் எழில்காட்டி இலங்கி வருவது நாடறிந்ததே.
எ
வ.சு.அவர்கள் 'திருவள்ளுவர் திருநாட் கழகம்' தோற்றுவித்து அதன் பொறுப்பாளராக அமைந்து விழாக்கள் கொண்டாடி யதையும் மலர் வெளியீடு செய்ததையும் முன்னரே அறிந்தோம். அவ்வாறே கழகச் சார்பில் 1968 இல் திருவள்ளுவர் திருநாள் விழாக் கொண்டாடி ‘மலர்' வெளியிட்டதையும் அறிந்துள்ளோம்.
தமிழகத்தில் இன்று சிறப்பாக விளங்கும் திருவள்ளுவர் முகங்களைத் தோற்றுவித்த பெருமைக்குரியவர் திருக்குறள் ண் வகை நினைவுக்கலைச் செல்வர் திரு. திப சுப்பிரமணியதாசு ஆவர். அவர் 1934 ஆம் ஆண்டு தம் அருமை மைந்தன் 10 அகவையுள்ள இராமதாசை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்தார். தந்தையைப்போலவே அந்த இளைஞனும் திருக்குறள் தேர்ச்சியாளனாக விளங்கினான். திருக்குறள் பதின்வகை நினைவாளனாகிய (தசாவதானியாக) அச் சிறுப்பெரியார் கழக ஆட்சியாளர் உள்ளத்தைக் கவர்ந்தார். தந்தையும் மைந்தரையும் அழைத்துப் பல மன்றங்களிலும் பள்ளிகளிலும் நினைவுக்கலை நடாத்தச் செய்வித்துப் பரிசும் பாராட்டும் பெறுவித்தார். இவ்விளைய மாணவர், "தமிழ்ப் புலவர் கல்லூரியில் பயின்று தமிழ்ப்பணி செய்தற்கு வேண்டும்" என்று அறிவுறுத்தினார். அவ்வாறு பயின்று தமிழ்ப்பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார் அந்த மாணவர் திரு. இராமதாசு என்னும் திருத்தக்கதேவர்.
முகவை மாவட்டம் காரைக்குடியைச் சார்ந்த கண்டர மாணிக்கம் ப.சு. வித்தியாசாலையில் 5 ஆம் வகுப்புப் படிக்கும் மாணவன் இரா. ஈசுவரன் என்பான் திருக்குறள் எண்திறல் தேர்ச்சியாளனாகத் திகழ்வது அறிந்து அவனைத் தக்காங்கு