உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

215

பால் தூயதாக இருத்தலுடன் அது வைக்கப்பெற்ற கலமும் தூயதாக இருத்தல் வேண்டும். அவற்றுடன் அப் பாலைப் பருகுதற்கு அமரும் சூழலும் அமைவுடையதாக இருத்தலும் வேண்டும். அவ்வாறே சீரிய நூலாக இருப்பினும் சிந்தைகவரும் புறவனப்புகளும், செவ்விதின் வைத்துப் போற்றியும் எடுத்துப் படித்தும் பயன்கொள்ளத்தக்க வாய்ப்பான வளநிலையமும் வேண்டும்; இம் மூன்றன் கூறுகளுடன் அந் நூற்றொகுதியை, அன்னையினும் பரிவுகூர்ந்து அவரவர் விருப்பும் குறிப்பும் அறிந்து எடுத்து உதவும் உழுவலன்பாளரும் உதவியாளரும் இருத்தலும் வேண்டும். நூல்நிலையத்தின் வெற்றிக்கு இவை யெல்லாம் தனித்தனிச் சிறப்புக்குரியனவே என்பதும் நாம் அறிந்ததே.

மறைமலையடிகள் நூல்நிலையம் அமைந்துள்ள கட்டடம் பழஞ் சிறப்பினது; வள்ளலார் தம் ஒன்பதாம் அகவையிலேயே சொற் பொழிவாற்றியது; சோமுசெட்டியார் என்பவர்க்குரியது. திருவருளாலே வள்ளலார் கண்ட சமரச சன்மார்க்க சங்கத்தையே பொது நிலைக் கழகம் என்னும் பெயரால் அமைத்து அரும்பணி செய்த வரும், வள்ளலார் பாக்கள் மருட்பாக்களே என்பார் முன்னே அருட்பாக்களே அவை என்பதை மெய்ப்பித்து அக் கொள்கையாளரைச் சூறையில் பஞ்செனப் பறக்க வைத்தவரும் ஆகிய மறைமலையடிகளார் திருப்பெயர் விளங்கும் நூலகம் வைத்தற்கு அவ்விடம் வாய்த்து திருவருட்செயலேயாம். இக் கட்டத்தின் தொல் புகழ் இவ்வாறாக, அதன் நிகழ்புகழும், எதிர்புகழும் உலகோர் கூட்டுண்ணும் அருங்கலைச் செல்வ விருந்தகமாக அமைந்துள்ள தாம். வள்ளலார் பெயர் சிறக்க இரண்டாம் மாடி அகல்பரப்பு வள்ளலார் திருவருள் மண்டபப் பெயர் தாங்கிச் சொற்பொழிவு மண்டபமாய்த் திகழ்கின்றதாம். இக் கட்டத்தை எப்படித் திட்ட மிட்டார் திரு.வ.சு. நூலக பேரறிஞர் அரங்காதரே அரங்கனார் திருத்தம்பியின் திட்டத்தை விளக்குறிார் :

"மறைமலையடிகளாரின் உடனுழைப்பாளர்கள் - சிறப்பாகத் திரு. சுப்பையாபிள்ளையவர்கள் - எவ்வளவோ ஆர்வத்துடனும் இடைவிடா அருமுயற்சியுடனும் இந் நிலையத்திற்குரிய திட்டங் களை நுணுக்க விரிவாகத் திட்டமிட்டு வந்திருக்கிறார்கள். சென்ற ஆண்டு இக் கட்டடத்தைப் பார்வையிடுவதற்காக அவர் என்னை அழைத்தபோது இந்தப் பழைய கட்டத்தைத் தம் புதிய பயனீட்டுக்காக என்னென்ன வகையில் திருத்தியமைக்கலாம்