30. புலவரைப் போற்றும் புகழ்மை
(“புலவரோடு அளவளாவும் இன்பத்தைப் பார்க்கிலும் நனி இன்பம் விண்ணுலகில் உண்டாயின் அதனை ஷயும் ஒரு முறை பார்த்து வருவோம்" என்றார் ஒருபுலவர் தோழராம் புலவர். "போற்றுதல்என்பது புணர்ந்தாரைப் பிரியாமை என்றார் இன்னொரு புலவர் பெருமகனார்.)
கழக ஆட்சியாளர் திரு. வ.சு. அவர்கள் புலவர் தோழராகத் திகழ்ந்ததைப் பரக்க அறிந்துள்ளோம். புலவர்களை ஊக்க முறுத்திப் புகழாளர்களாக்கிய புகழ்மையையும் ஆங்காங்கு அறிதுள்ளோம். புலவர் புகழ்பாடிய சீர்த்திகளையும் எடுத்த விழாக்களையும் குறிப்பாய் அறிந்துள்ளோம். இவண் புலவர் களைப் போற்றிச் சிறப்பித்த சில நிகழ்ச்சிகளைக் காண்போம்.
புலவர் புகழ்பெருக்குதலும், புலவர்க்கு விழாக்கோடலு புலவரைப் போற்றுதலே எனினும், அதனினும் அவர்களுக்கு உற்றுழி உதவுதல் தலையாய போற்றுதலாம். அதிலும், பொருள் முடையும் நோய்த்துயரும் உடையராயும், உதவிப்போற்றும் உழையராம் உள்ளன்புடையார் இலராம் போதும் உதவும் உதவி உண்டே அஃது ஒப்பிலாதுயர்ந்த போற்றுதலாம்.
6
திருக்குறள் அறத்துப்பாலுக்கு விருத்தியுரை எழுதிய நாகை சொ. தண்டபாணிப் பிள்ளை கடவுள் வாழ்த்து முதல் 30 அதிகாரங்களுக்கு உரை எழுதிவந்தார். பின்னே எழுத்துப்பணி தொடர முடியாமல் இருமல்நோயால் பெரிதும் வருந்தினார். இராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பெற்றார். உரையெழுதும் காலத்திற்குத் திங்களுக்கு ரூ. 35 தருவது என்றும், உரை முடிந்தபின்னர்க் கணக்கிட்டு ஒரு தொகை தருவது என்றும் உறுதி செய்யப்பெற்றது. அவ்வாறே நோயுற்ற போதும் தொடர்ந்து அத்தொகை அவர்க்குத் தரப்பெற்று வந்தது. இது 1921 ஆம் ஆண்டு எனில் அந்நாளில் 35 ரூபா மதிப்பு எத்தகையது என்பது புலப்படும்!