உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

249

உரியது. தமிழ்மொழி இலக்கிய ஆராய்ச்சியாளர்கட்குப் பெரும்பயன் தரக்கூடிய அரும்பெரும் நூல்களைத் தொகுத்து மறைமலையடிகள் நூல் நிலையம் ஒன்றைச் சென்னையிலே அமைத்திருப்பதற்கு அவரே காரணராவார்.

"திரு. பிள்ளை அவர்கள் தமிழ் வளர்ச்சி மன்ற உறுப்பி னராகவும், தமிழக அரசுத் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சித் துறையில் கருத்துரை வழங்குநர் குழுவில் ஓர் உறுப்பினராகவும் இருக்கின்றார்.”

தனித்தமிழை வளர்த்துவரும் தகவாளர் ஆகிய வ.சு. அவர்களுக்கு வடமொழியில் வழங்கப்பெற்ற பட்டம் உவகை தருவதாய் இல்லை. எனினும் ஏற்றுக்கொள்ள நேர்ந்த குறிப்பினை அவர்களே குறிப்பிடுகின்றனர்: "தனித்தமிழ் வளர்த்துவரும் யான் எங்ஙனம் வடமொழியில் பட்டத்தை ஏற்பது எனத் தயங்கினேன். ஆனால், திருக்குறளை உலகெங்கும் பரப்பும் முயற்சியிலி ஈடுபட்டேனுக்குத் திருவள்ளுவர் 2,000 ஆண்டிலே இப்பட்டம் கிடைப்பது திருவருட் குறிப்புப்போலும் என்று கருதுவதாலும் கழகத்தின் தமிழ்நூல் வெளியீட்டுத் தொண்டிை உலகறியச் செய்யும் வாய்ப்பு இதனால் ஏற்படும் என்பதாலு ஒப்புக்கொள்ள வேண்டியவனானேன்.”

பாரதமணி (பாரத ரத்னா) என்னும் பட்டத்தைப் பெறுத் குரிய தகுதி தமக்கு இருந்தும், தாமரைத்திரு என்னும் பட்டம் பெற்ற காலையில் தமக்கு அப் பட்டம் வருதற்குக் காரணராய் இருந்தவர்கட்கு உள்ளங் கொள்ளை கொள்ள நன்றியுரைக்கும் சீர்மை எண்ணுந்தோறும் இன்பம் பயப்பதாம். 'என்றும் பணியுமாம் பெருமை' என்னும் பொன்மொழிக்கு எடுத்துக்காட்டுமாம்.

"தமிழ் நூல் வெளியீட்டுத் துறைக்காகவே என்னைப் படைத்து நாளும் கணமும் தோன்றாத் துணையாக விருந்து எனது பணி சிறக்க அருள்புரிந்துவரும் எல்லாம் வல்ல இறைவனுக்கு முதற் கண் எனது வணக்கம். அடுத்து என்னை ஈன்று வளர்த்த தாய் தந்தையர்கட்கும், எனக்குக் கல்வி புகட்டி இவ்வரும் பெருந்துறையில் ஈடுபடுத்திய என் அருமைத் தமையார் (முயற்சியின் உரு) திருவரங்கனார் அவர்கட்கும் அன்பு கலந்து

வணக்கம்.

"என் தமையனார் புத்தக வாணிகத்திற்காகத் 'திருசங்கர் கம்பெனி' என்ற நிலையத்தைத் தொடங்கி நடத்தி வந்தனர். அதனைக் கண்டு பங்குசேர்த்துக் கூட்டுக்கழகமாக நடத்துதல் நலம் பயக்கும் என்று கூறி ஊக்கமூட்டிய காந்தியவழி வாழ்ந்து