உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




B

கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

251

துணைக் கண்டத்திலேயே இணையற்ற நிறுவனமாகச் சைவ சித்தாந்தக் கழகத்தைச் செய்தும் விளங்குவதற்குத் திரு.வ.சு. அவர்களின் உயர்வற உயர்ந்த உயர்வு போற்றுதற்குரியதாம். உயர்மன்ற நீதிபதி திரு. எம். எம். இசுமாயில்தலைமை தாங்கினர். சட்டத் துறைச் செயலர் திரு.டி.எஸ். இராமலிங்கம் பிள்ளை வரவேற்றுப் பணிநலம் பாராட்டினார். காந்தியக் கவிஞர் திரு.எஸ்.டி. சுந்தரம் பாராட்டுரைத்தார். திரு.வ.சு. நன்றியுரைத்து அறிஞர் ஆண்ணா அவர்களின் பேருள்ளத்தைப் பாராட்டினார்:

“புலவர்களெல்லாம் போற்றும் பெரும்புலவராய் விளங்கிய தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார் வழியில் நின்று ஆற்றி வரும் சிறியேனது தமிழ்த்தொண்டைப் பாராட்டி மிகவும் பரிவோடு மைய அரசினர்க்கு மதித்துரைத்துப் பத்மஸ்ரீ (தாமரைச் செல்வம்) என்னும் பாராட்டுப் பட்டத்தைக் குடியரசு நாளன்று வழங்குமாறு செய்த தமிழ்ப் பேறொளி பேரறிஞர்அண்ணா அவர்கட்கு எனது உளங்கனிந்த வணக்கம்.

26-3-69 இல்சைவ வேளாளர் பேரவையின் சார்பில் பாராட்டு விழா நிகழ்ந்தது. அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றப் பொருளாளர் திரு.ஆ. சுப்பையா தலைமை தாங்கினார். திரு. ஆர்.வி. அரசு வரவேற்றார். திரு. மீ.ப.சோமு அவர்கள் திரு.வ.சு.வின் பணித்திறம் பாராட்டி, மெய்ப்புப் பார்க்கும் மேன்மையை வியந்தார். "அப்பளத்தில் கல்கிடந்தால் எப்படிப் பல்லை உடைத்துவிடுமோஎன்று கல் இல்லாது அப்பளம் இடுவது போல ஓர் அச்சுப் பிழைகூட இருக்கக்கூடாது என்று பாடுபடுகிறார் என்றார். சட்டத்துறை ஆணைக்குழுச் செயலுறுப்பினர் திரு. மா. சண்முகசுப்பிரமணியம், தமிழ்ப் பேராசிரியர் திரு.க. வடிவேலாயுதம் ஆகியோர் பாராட்டினர். திரு. நெ. வள்ளிநாயகம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பேரவையின் சார்பில் வ.சு. அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தப்பெற்றது, விழா எடுத்த பெருமக்களுக்குத் தக்கவாறு நன்றியுரைத்தார் திரு.வ.சு.

18-5-69 இல் தூத்துக்குடி சைவசித்தாந்த சபையின் சார்பில் வ.சு. அவர்களுக்குப் பாராட்டு விழா நிகழ்ந்தது. தருமை ஆதீனம் தவத்திரு சோமசுந்தரத் தம்பிரான் அவர்கள் தலைமை யேற்றார். திரு. அங்கப்ப பிள்ளை பாராட்டுரை வழங்கினார். நன்றியுரைத்தார் திரு.வ.சு.