உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




268

இளங்குமரனார் தமிழ்வளம்

27 க

அச்சகப் பொறுப்புக்குத் திரு. கோவிந்தராச முதலியரைத் தேர்ந்தார். அவர் வழியில் இவர் நின்றார். இவர் வழியில்அவர் நின்றார். இவர் வழியில் அவர் நின்றார். இவரும் அவரும் செயலில் ஒன்றாயினர். அரசினர் பரிசும் அச்சக அமைப்பின் பரிசும் ஓடித் தேடி வந்தன. அது கோவிந்தராசனார் சிறப்பா அவரைப் பொறுப்பாளர் ஆக்கிய ஆட்சியாளர் சிறப்பா?

எந்தநூல் எவர் எப்பொழுது அச்சிட்டார் அது விற்பனைக்கு எங்கே கிடைக்கும்? எவரிடமும் கிட்டாத அரியநூல் எவ்வெவரிடம் உண்டு? இப்படிப்பட்ட செய்திகளையெல்லாம் விரல் நுனியில் வைத்திருப்பார்போல் ஒருவர் உளர். அவர் திரு. செல்வராசன்; நூல் விற்பனைப் பிரிவுப் பொறுப்பாளர் அருங்காட்சி அமைப்புக்கு அவர்பட்டிருக்கும் பயன் பெரிதாகும்.

எந்த நூலில் எத்தனை படிகள் உண்டு - எந்த நூலை எப்பொழுது அச்சிடவேண்டும் - என்னென்ன வகையில் அட்டை கட்டலாம் - எப்பணியை விரைந்து செய்யவேண்டும் - எதனைத் தாழச்செய்யலாம் - இவையெல்லாம் கையில் கனியென வைத்துக் கொண்டு கடனாற்றவல்ல திரு. பார்த்தசாரதி, நூல் கட்டடப் பகுதிப் பொறுப்பாளர்.

"இத்தளிர் இன்று தளிர்த்தது, இப்பூ இன்று அரும்பியது, ன்று முந்துறக் கண்டு சொல்லிச் சொல்லிப் பெரும்புலவர் மீனாட்சிசுந்தரம்பிள்ளை பேரன்புக்கு ஆட்பட்ட தவத்தமிழ்ச் செல்வர் சாமிநாதையர்போல் ஆட்சியாளர்க்கு உவப்பான வற்றைத் தேர்ந்து தேர்ந்து செய்யவல்ல பொதுமேலாளர், மேலாளர்கள், நூலகர்கள், எழுத்தர்கள் பணியாளர்கள், வீட்டு வேலைக்காரர்கள். யான் கண்டனையா என்ற பெரும் புகழ்ப் பிசிராந்தையார் ஆவார். இவ்வகையில் ஆட்சியாளர் திரு.வ.சு." தேர்ந்து செய்தல்

செய்வன திருந்தச் செய்யவேண்டுமாயின் தேர்ந்து செய்யும் திறம் கட்டாயம் வேண்டும். தேர்ந்து செய்தலில் தனித் திறவோர் திரு.வ.சு.

அறிவியல் அறிஞர் கோ. து (G.D.) நாயுடுவுக்கு ஒரு பாராட்டுவிழா, சென்னையில் நடாத்தப்பெற்றது. வரவேற்புக் குழுவில் வ.சு. இருந்தார். பேரறிஞர் அண்ணா தலைமையில் விழா நிகழ்ந்தது. வரவேற்பிதழ் அமைப்புப் பொறுப்பை வ.சு.