கழக ஆட்சியர் வ.சு.வரலாறு ஓ
271
அறநிறுவனங்களை நிறுவி அதன்பயனை எவ்வளவு மிகுதியாக இந்த மன்பதை கொள்ளக்கூடுமோ, அள்ளிக்கொள்ளக் கூடுமோ, அவ்வளவுக்கு வாங்கி, அவ் வழங்கும் இன்பமே தன் இன்பமாய், அவ்வின்பத்தைப் பெறுவார் இன்பத்தைப் பார்ப்பதே தம்பேறாய் விளங்கும் அறங்காவலர்.
சிவஞான முனிவர் நூல்நிலையம், மறைமலையடிகள் நூல் நிலையம், மறைமலையடிகள் கலைமன்றம் - இவற்றின் பார்வை யாளர் ஏடுகள் என்ன பறையறைகின்றன? இந்த அறங்காவலர் அரும்புகழையேயாம்.
கழகமே மூச்சும் பேச்சும்
"செய்யும் தொழிலே தெய்வம்” என்னும் தொடர் இப்பொழுது பழமொழிபோல வழங்குகிறது. ஆனால்அதனைத் தம் உயிர்மூச்சாகக் கொள்வது அருமையேயாம்!
கழகம் வேறு தாம் வேறு என எந்நிலையிலும் எப்பொழுதிலு பிரித்துக்காண இயலாத தற்கிழமைப் பொருட்டாளரா இயங்குபவர் திரு.வ.சு. கழகத்திற்கு எத்துணையோ இடா பாடுகள், மோதல்கள், பிடுங்கல்கள், முட்டுப்பாடுகுள், வழக்குகள் அவற்றை யெல்லாம் வென்று வீறுடன் திகழ்பவர் திரு.வ.சு.
எத்தனையோ உரிமை அன்பை இழந்ததுண்டு. எத்தனையோ உறவையும் புறக்கணித்ததுண்டு. எத்தனையோ வசைகளை வாங்கிக் கொண்டதுண்டு. ஆனால் எவ்வெவற்றை இழக்க நேரினும், எவ்வெவ்விடர்களைச் சந்திக்க நேரினும் கழகத்தை அதன் நல்வாழ்வை -அதன் வளர்ச்சியை, இழக்கத் துணியாத உரவோர் திரு.வ.சு.
கழக வாழ்வா? எம் வாழ்வா? என்னும் ஒரு வினா எழுப்பப் பெறுமானால் 'எம் வாழ்வான்று, கழக வாழ்வே' எனப் பளிச் செனச் சொல்லும் பண்பாட்டுக்கொள்கலம் திரு.வ.சு.
எல்லாம் துறந்தும் தமிழ் துறவா இளங்கோவைப்போல் எண்ணத்தக்க சீராளர், கழகத்தை இழக்க நினைத்தும் பார்க்க முடியாத' இத்தாமரைச் செல்வர். அவர்பேச்சும் மூச்சும் கழகமே. "வழுக்கி வீழினும் சொல்லும் நா கழகமே".