உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




276

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

அமைந்த நாற்காலியையும் மரப்பலகை பரப்பிய கட்டிலையுமே பயன்படுத்துவார். இவற்றைப் பயன்படுத்துற்கும் கொள்கையும் கடைப்படியும் கொண்டிருத்தல், திட்டமிட்ட அவர்கள் வாழ்வுக்கு எடுத்துக்காட்டாகவே அமையும்.

படம்பாராமை

நாடகத்தை விரும்பும் திரு.வ.சு. திரைப்படத்தைப் பார்ப்பதே இல்லை. சென்னை முகவராகப் பணிசெய்தபோது ஓரிரு முறை திரு. காழி. சிவ. கண்ணுசாமிப்பிள்ளை வற்புறுத்தலால் அவருடன் படத்திற்குச் செந்றதுண்டாம். அரங்கில் சென்றளதும் உறங்கிப் போவதே வழக்காம். துணைக்காகப் போனதை அன்றிப் பட விருப்பத்தால் போனது இல்லையே!

திருநெல்வேலி சுந்தரஓதுவார்மூர்த்தி மிக அன்பர். மதிப்புக்கும் உரியவர். அவர் பட்டினத்தார் என்னும் படத்தில் நடித்திருந்தார். அப் படத்தை அவரே வற்புறுத்தியும் போய்ப் பார்க்க வில்லையாம்.

தீக்கனம்

கட்டுப்பாடுடையவர்கள் வாழ்வு சிக்கன வாழ்வாகவே அமையும். காந்தியடிகளும், தந்தை பெரியாரும் சிக்கனச் சீர்மையரே. அவர்கள் சிக்கனம் நாட்டுநலம் கருதியதாகவே அமைந்தது. தாமரைச் செல்வரும் சிக்கன வாழ்வினரே. வேண்டாத வகைக்குத் தம் ஒரு காசும் போய்விடக்கூடாது என்பதில் உன்னிப்பாகவே இருப்பார். நெல்லுக்குப்போகும் நீர் புல்லுக்குப் பொசிந்தால் புல்லைவளர்த்து, நெல்லைக் கெடுக்கவே உதவியாம். ஆதலால், நல்ல உழவன் கடமை, நெல்லுக்கு மட்டுமே நீர் பயன்படுமாறு செய்தலாம். இக் கொள்கையில் தோய்ந்தவர் அவர்.

ஆனால் செய்யத்தக்க செலவைக் குறைப்பதே இல்லை. கடன் பட்டும் கடமைபுரியும் கடன் மேற்கொண்ட நிகழ்ச்சிகள் உண்டு. கையிருப்பைக் கணக்கிட்டுக்கொண்டு பயனுள்ள செயல் களில் ஈடுபடுவதில்லை. வருமானம் ஒன்றையே கருதிவிலை போகும் நூல்களை வெளியிட அவர்கள் ஒரு நாளும் நினைத்தும் இல்லை. மொழிநலம் பயக்கும் நூலாயின் எத்தகைய முட்டடிப்பிலும் எத்தகு நெருக்கடியிலும் வெளியிட்டே தீர்வர். இந்நூல் விலைபோகாதே! என்று எழுதிய ஆசிரியர்களே