உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34. உரைமணிமாலை

(பொன்னும் மணியும் பவழமும் பொருந்தித் தோன்றி மாலையாகப் பொலிவுறதலைக் காட்டினார் சங்கச் சான்றோர் பிசிராந்தையார்! இருபதாம் நூற்றாண்டுச் சான்றோர்கள், ‘வயிரமுத்து' வழங்கிய மாமணிக்கு ஒப்பிலா மணிமாலை சூட்டுகின்றனர்; இவை உரைமணி; தொடுத்து வருவது பாமணி; நிறைவோ கருதுவார் கருத்துமணி.)

மறக்க இயலா மனிதர்

ள்

அவரிடம் ஒருநாள் பழகியவர்கள்கூட வாழ்நாள் உள்ள வரையில் அவருடைய இனிமையான பண்பையும் மென்மைக் குணத்தையும் அறிவாழத்தையும் மறக்க இயலாது. சிறிது காலமே ஆயினும் அவருடன் பழக நேர்ந்ததை நான் பெரிய பாக்கியமாகக் கருதுகின்றேன்.

திரு. ஓ.வி. அளகேசன்.

அருமைக்கு ஒருவர்

தமிழ்நெறிக்கும் சிவநெறிக்கும் அருந்தொண்டாற்றிவரும் பிள்ளையவர்கள் சிறந்த இதழாசிரியர்; பதிப்பாசிரியர்; நூற் பயிற்சிமிக்க நுண்ணறிவாளர்; நாநயமிக்க நாவலர்; சைவம் தழைக்க வைத்த தகைமையாளர்; தமிழ் காத்த காவலர்; நேர்மை பிழையா நிருவாகி; இத்தனை சிறப்புகளும் ஒருங்கே ஒருவரிடம் அமையும் அருமையைப் பிள்ளைபால்காண்கின்றோம்.

-டாக்டர் பா. நடராசன்.

பற்றுக்குப் பற்றானவர்

இவருடன் சிறிது நேரம் உரையாடினல் தமிழ்ப்பற்றும் கழகப்பற்றும் காலத்துக்கும் நம்மை ஒட்டிக்கொள்ளும். ஆர்வமும் ஊக்கமும் நமது சொத்தாகிவிடும். இடையறா உழைப்பு இவரது வெற்றியின் இரகசியம்.