உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

15

வெளியிட்ட ஒரு நூலுக்கு ஒரு பக்கம் எழுதுவது என்றாலும், இந்நூல் எவ்வளவு விரிந்து போகும்! ஒரு பானை சோற்றுக்கு ஓரவிழ் பதம் என்று இவ் வரலாற்றைக் கொள்க.

தொகுப்புக் கலை ஏந்தலாகிய இவர், கடிதக்கலைக் காவலர் என்பதைக் கட்டாயம் குறிப்பிடல் வேண்டும. இவர் எழுதிய கடிதங்கள் ஓராயிரமா? ஈராயிரமா? பன்னாயிரம் என்க. இக் கடிதங்களுங்கு வைப்புப் படிகள் உண்டு என்றால், இவர் கடித வைப்பர் என்பதில்என்னே ஐயம்! இவர் எழுதிய கடிதங்கள் இத்துணை என்றால், இவருக்கு அறிஞர்கள் எழுதிய கடிதங்கள் எத்துணை! கட்டுக் கட்டாகவும், கோப்புக் கோப்பாகவும் வைக்கப்பெற்றுள! அவை ஆவணக் காப்பகம் போலக் கடிதக் காப்பகமாக அமைத்தற்கு உரியவை. அவற்றை ஒழுங்குறுத்தி விரிந்த வரலாறு எழுதுவதாயின் ஆயிரம் ஆயிரம் பக்கமாக நூல் விரியும். அவ்விரிந்த நூல், தமிழகத்தின் இவ்விருபதாம் நூற்றாண்டின் 'வரலாற்றுக் கலைக் கருவூலமாகத் திகழும்!

எளியேன் வாழ்வில் இயல்பாகப் பெற்ற அரிய பேறுகள் சில உண்டு. அவற்றுள் தலையாய ஒன்று கழக ஆட்சியாளர் அவர்களின் கணிப்பரும்கட்டிலாக் காதன்மைத் தொடர்பு! அத் தொடர்பால் அமைந்த பெரும்பேறு, எளியேன் வாழ்வு, முழுதுறும் அமிழ்தத் தமிழ் வாழ்வு ஆகியதேயாம்! இன்பத் தமிழில் இடையறாது தோய்ந்து, எய்ப்பிலா நலத்தை என்றென்றும் எய்திக்கொண்டிருக்கும் பேறு எளிதில் எவர்க்கும் வாய்ப்பதோ? அவ் வாய்ப்பின் இடையே வாய்த்த தனிப்பெரும் பேறு செயலாற்றுதலைச் செழுந்தவமாகக் கொண்ட இச் செந்தமிழ்ச் செல்வர் வரலாற்றை எழுதும் பேறாகும். என்னெனின், இவ் வரலாறுடையார் இடத்திலிருந்து ததும்பி வழியும் தனித்தமிழ்ப் பற்று எவர்க்கே வாய்க்கும்? இத் தனித் தமிழ்த் தொண்டு செய்ய எத்துணைப் பேர் முனைந்தார்? அம் முனைப்பை என்றும் அயராமல் சோராமல் முழுதுறச் செலுத்தி எத்துணைப் பேர் செயலாற்றினார்? இவர்தம் செயலாண்மைத் திறத்திற்கு இத் துறையில் இவர்க்கு ஒப்பாகவாதல், உயர் வாகவாதல் எவரே இருந்தார்? இவரைப் போல் பயனில நினையாமை, பயனில சொல்லாமை, பயனிலு செய்யாமை எவரே பாரித்துச் சிக்கெனப் போற்றியிருந்தார்? இவரைப்போல் பயனில எவரே பாரித்துச் சிக்கெனப் போற்றியிருந்தார்? இவரைப் போல் மறைமலைக்குப் பரப்புநராகவும், கூட்டுப்பங்கு நிறுவனத் திற்குக் காட்டுநராகவும் எவரே இருந்தார்? இருக்கின்றார்?