312
இளங்குமரனார் தமிழ்வளம் - 27 மணி மாளிகை
அஞ்சா நெஞ்சத் தடலே றனையர்; அரசு புகழும் அறிவுறு பெருமான்; அருங்செய லாற்றும் பெருந் திற லாண்மையர்; அமிழ்தத் தமிழே ஆருயி ராயவர்;
அறனறிந் தானறமைந் தொழுகும் அண்ணலார்; ஆட்சித் தமிழுக் கடிகோல்ஆட்சியர்; இளையருள் இளையர் எழுச்சி கூர்தலில்; உழைப்பிற் கொருதாம் ஆகிய உரவோர்; எடுத்துக் காட்டாய் இலங்கும் வாழ்க்கையர்; எடுத்த செயலை இனிது முடிப்பவர்; எண்ணிய எண்ணியாங் கெய்து திண்ணியர்; 'ஒளிநெறி' காட்டும் ஒள்ளிய செல்வர்; ஒளிவளர் கதிரை ஒத்திடும் ஒருவர்; கருவிலே திருவுறு கட்டமை தீரர்;
கல்லையும் கனியாய் அமைத்திடும் காட்சியர்; கழகச் சிலைவடி கலைவல சிற்பியர்; கவின்தமிழ் உணர்வைக் கருதி வளர்ப்பவர்; குறள்நெறி பரப்பும் குரிசில், கோமகன்; சாந்தில் தொடுத்த தீந்தேன் அன்பர்; சிவநெறி தழைக்க உழைக்கும் செம்மல்; செந்தமிழ் வளர்க்கும் செவிலித் தாயர்; செயற்கருஞ் செய்கைச் செந்தமிழ் மாமணி; சொன்மா றாத நன்மா மணியர்; தக்கார் பலரைத் தடுத்தாட் கொண்டவர்; தகுதி யறியும் தலைவருள் தலைவர்; 05தண்டமிழ் காக்கும் தகவுறு தாத்தா; தமிழ்மகள் பெற்ற தவப்பெரு மைந்தர்; தமிழுயர் வொன்றே தம்முயிர்ப் பாயவர், தமிழே வாழ்வாம் தகைசால் பெரியர்; தனித்தமிழ் வளர்க்கும் தனிப்பெருந் தகையர்; திட்டமிட்டுத் தெளிந்துசெய் திருவர்; தொகுப்புக் கலைக்குத் தொல்வர வானோர்;
e
30
35
40
45
50
55