உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

317

கழகத்தின் இப் பெரிய சிறப்புக்கு அரிய பெரியார் ஒருவர் உளர்; என்றும் தமிழ் நினைப்பினர்; தூய தமிழ் எண்ணத்தினர்; தமிழே போல் தமிழ்ப்புலவர் உருவங்களைப் போற்றுபவர்; தமிழ்த் திட்டம் கற்பனையில் வகுத்து, வகுத்தபடி செயல் கண்டு வருபவர்; தமிழ்மை யுடையனவற்றைத் தொகுத்து, வகுத்துப் பதிப்பிப்பதில் தமக்குவமையில்லாத் தனித்தகை. அவர்தாம் தாமரைச் செல்வர் தமிழ்த்திரு வ. சுப்பையாபிள்ளை அவர்கள்.

தமிழுக்குப் பின்தான் கழகம் தோன்றியது என்றாலும் தமிழோடு ஒப்பக் கழகம் என்றும் வாழ்கதில். 1500 நூற் குழந்தை களை ஈன்ற கழகக் காதலர் திரு. சுப்பையாபிள்ளை அவர்கள் நூற்றிதழ் அலரி நிரை கண்டாற் போல், நூறு பல்லாண்டு உரையும் பாட்டும் உடையோராய் வாழ்கதில்.