320
இளங்குமரனார் தமிழ்வளம் - 27
இவர் ஏற்று உறுதிப்பணி இயற்றி வருதலால், தமிழகத்தின் ஆக்க நோக்கங்கட்கு இவரனையோர் பெருவாழ்வு இன்றியமையாத தாகின்றது. தமிழகம் இவ்விறுவிறுப்பமைந்த ஆடவர் தலைவரின் வாயிலாக எத்தனையோ ஆக்க நோக்கங்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது. வாழ்க்கை வீரராகிய இவரது நல்வாழ்வுக்கு நாடு மகிழ்ச்சி முகங்கொண்டு வாழ்த்துகின்றது.
வாழ்க்கையில் அறுபதாம் ஆண்டின் நிறைவு விழா, அன்பு கலந்த உழைப்பின் மணி முடியாட்சியை நினைவுறுத்தும்; இனி, யாவர் நலத்துங் கருத்தமைந்த அருள் கலந்த செய்கையின் தண்ணிலா வாழ்க்கையில்நாட்கள் நடக்க வேண்டும்.
திருமிக்க வ.சுப்பையா பிள்ளையவர்களுக்கு மாம்பாக்கம் குருகுலம் பல்லாண்டு கூறுகின்றது. பள்ளிச் சிறுவர் இருநூற்று வரும், இல்லச் சிறுவர் நாற்பதின்மரும், ஆர்வலர் அன்பர் மாணவர்ஆயிரவரும், திரு. பிள்ளையவர்களின் வீர வாழ்வுக்கு, வெற்றி வாழ்வுக்கு, மணிநிலா வாழ்வுக்குப் பல்லாண்டு இசைக்கின்றனர்.
பாலியாற்றின் நன்மணல்பலவினும் இந் நூற்பதிப்பு வீரர் வாழ்நாட்கள் ஊற்றம் மிகுகவென அனைவேம் உள்ளமும் இம் மணிவிழா நாளில் திருவருளைப் பரவி இறைஞ்சுகின்றது. வாழி வ.சு. வெல்க அவர் இல்லம். போற்றி கழகத் தொண்டுகள்.