324
இளங்குமரனார் தமிழ்வளம் -27
திரு பிள்ளையவர்கள் குடியிருந்த திருக்கோயிலான அகவை முதிர்ந்த அவர்களின் அன்னை பெருமாட்டியாரையும் அங்குச் சேவித்து அளவளாவி அக முவப்பேன்.
அண்ணானாரும், தம்பியாரும், பலவகையான தமிழ்ச் செய்திகளைத் திரட்டுவதிலும் பழந்தமிழ் நூல்களைச் சேகரிப் பதிலும் கொண்டிருந்த உந்தும் ஊக்கத்தை அப்போது நேரிலும் அறிவேன். திரு.வ. திருவரங்கம்பிளையவர்களது சட்டையின் மூன்று பைகளிலும் கையெழுத்துத் தாள்களும், அச்சு ஏடுகளும் எப்போதும் அடைபட்டு இருப்பதைக் கண்டு வியப்பேன். சட்டைப் பைகள், அவர்கள் தமிழ்ப்பற்றினைப் போலவே பெரியனவாக இருந்தமையின், அவை கிடைத்வற்றையெல்லாம் கொள்ளும் தகையனவாயிருந்தன.
1940 இல் சென்னை, பவழக்காரத்தெரு, கழக அலுவலகத்தில், 'ஆட்சிச்சொல் அகரவரசை'யை ஆராயப் பிள்ளையவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். என் அன்பின் நண்பர்களான திரு. தேவநேயப்பாவாணர், திரு. காழி சிவ கண்ணுசாமிப்பிள்ளை, திரு. க.ப. சந்தோஷம் (கபசம், மகிழ்நன்) ஆகியவர்களைத் திரு.வ. சுப்பையாபிள்ளையவர்கள் கூட்டியிருந் தார்கள். என்னையும் அழைத்திருந்தார்கள். ஆராய்தற்குரிய சொற்பட்டியை என்னை முன்னமே ஆயத்தம் செய்யச்சொல்லிப் பெறு வைத்திருந்தார்கள். ஆய்வின் இடையிடையநோவிற்குச் சுவையான சிற்றுண்டியினையும் பானங்களையும் வழங்கி இன்புறுத்தி வந்தார்கள். மகிழ்ச்சியோடு, பட்டி ஆராயப்பெற்றது.
இவ்வாட்சிச் சொல் அகரவரிசையைக் கழகம் வெளி யிட்டதே தமிழகத்தில் தமிழ் ஆட்சி நடைபெறுவதற்குக் கால்