உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

51

கழகம் என்னும் சொல் பழங்காலத்தில் பெருமைப் பொருள் தருவதாய் இல்லை. திவாகரமுனிவர், பரஞ்சோதி முனிவர் ஆகியோர் காலத்துக்குப் பின்னே தான் கழகம் என்பது சான்றோர் அவையம் என்னும் பொருட்சிறப்புடைய சொல்லாயிற்று. அச் சொல்லை நாடறிந்த பெருமைச் சொல்லாக மாற்றி வழங்கு வித்தது இச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகமேயாம். இக் கழகம் தோன்றிச் சீரிய பணிகள் செய்து கழகச் சொல்லுக்குத் தனிப் பெருமை சேர்த்த பின்னரே, கட்சிகளும் அமைப்புகளும் அவையங்களும் கழகப் பெயர் கொண்டன. இவையெல்லாம் எண்ணி மகிழத்தக்கவை என்க.