உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

53

'உருளையையும் பாரையும் கோத்து உலகின்கண்ணே செலுத்தும் காவலுடைய வண்டி, அதனைச் செலுத்துவோன் மாண்புடையன் ஆயின் ஊறுபாடு இல்லாமல் வழியில் இனிதாகச் செல்லும். அவன் அதனை இனிதாகச் செலுத்துதலைத் தெளிய மாட்டாதவன் ஆயின் அது நாள்தோறும் பகையாகிச், செறிந்த சேற்றுள் அழுந்தி மிகப்பல தீய துன்பத்தை மேலும் மேலும் உண்டாக்கும்" என்பது அவர் சொல்லிய அறிவுரையாம்.*

கழக வண்டியைச் செலுத்துதலிலும் இடர்கள் மிகப்பல உண்டாயின; எதிரிட்டன. எனினும் அதனைச் செலுத்துவோர் திறம், ஊறுபாடுகளை யெல்லாம் அறவே அகற்றிச் செவ்விய சாலையில் செம்மாந்து செல்ல உதவியது'.

குழந்தைகளுக்கு எளிதில் நோய் பற்றிக்கொள்ளல் உலகறிந்த உண்மை. அவ்வாறே எந்த அமைப்புக்கும் தொடக்கத்தில் தொல்லைகளும் துயர்களும் வந்து முட்டுதல் தவிர்க்க முடியாதவை. அவ் வேளைகளில் எல்லாம் ஆட்சிப் பொறுப்புடையார் திறங்களே அமைப்பைக் கட்டிக்காத்துள்ளன. அவ் விதிக்குக் கழகமும் உரிமை பூண்டதேயாம்.

1920 ஆம் ஆண்டில் கழகம் தொடங்கிய நாள்முத ஆட்சிப் பொறுப்பில் இருந்து அரும்பாடுபட்டவர் திருவரங்கனா?. அக்காலத்தில் கழகப்பங்குகள் சேர்க்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு அளவே இல்லை. பெரும்பாலான பங்குகளைத் திரட்டிக் கழகத்தை நிலைபெறுத்திய 'கழகக் காவலர் அவரே எனில் மிகையன்றாம்.

அக்காலத்தில் இளவலார் வ. சு. சென்னைக் கிளையின் முகவராக இருந்தார். அவர் நூல் வெளியீட்டுக்காகவும் அவற்றை விற்பதற்காகவும் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அளவில் அடங்காதன. இவ்விருவகை முயற்சிகளும் இருபாலும் இனிதின் இயங்கியமையால்தான் கழகம் தன் காலை வலிமையாக ஊன்றி நிலைபெறலாயிற்று.

அண்ணல் அரங்கனார்க்குப் பின்னே 1945 ஆம் ஆண்டில் ஆட்சிப்பொறுப்பேற்று நாளிது வரை நடாத்திவருபவர் வ. சு. அவர்கள். அண்ணல் அரங்கர் 'காவல் குழவி கெள்பவர்

புறம்.185