உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

தட்டப் படிவத்திலே சேர்க்கலாம். இம் முறையைக் கடைப் பிடிப்பின் அச்சுக் கோப்பவர்களுக்குத் தொல்லை இல்லை.

"பத்தி பிரிக்க வேண்டிய இடங்கள் இருப்பின் கையெழுத்துப் படியிலேயே பிரித்து விடுதல் வேண்டும். அவ்வாறு செய்யாமல் விட்டுப்போனால் தட்டப் படிவத்தில் கட்டாயம் செய்தல் வேண்டும்."

"ஒரு நூலுக்குப் பின்னிணைப்பாகப் பாட்டு முதற்குறிப்பு அகர வரிசையோ, அருஞ்சொற்பொருள் அகரவரிசையோ, மேற்கோள் நூல் அகரவரிசையோ சேர்க்க வேண்டுமானால், கூடுதல் படிவங்கள் உள் நூல்களுக்கு நூல் முடியும்வரை காத்திராமல் சில படிவங்கள் அச்சிடப் பெற்றதும் புள்ளியிடப் பெற்ற நெடுந்தாள்களில் தனித்தனி எழுதி வருதல் வேண்டும். நூல் முடிந்ததும் தனித்தனித் துண்டுகளாக்கி அகரவரிசைப் படுத்தி அகல நீளமுள்ள பெரிய தாளில் பத்தி பத்தியாக ஓட்டி அச்சுக்கோப்பதற்குக் கொடுத்தல் வேண்டும். நூல் அச்சு முடிவதற்குச் சிறிது முன்பே பதிப்புரை, முன்னுரை, பொருளடக்கம் ஆகியவற்றை எழுதுதல் வேண்டும். அப்படிச் செய்வதால் காலந் தாழ்க்காமல் நூல் வேலை முடிவுபெறும். நூல் அச்சு முடியும் நிலையில் அதனைக் கட்டம் செய்தற்கு வேண்டியவற்றைத் திட்டப்படுத்திக்கொள்ள வேண்டும்."

"இவ்வாறு முறையே செய்துவரின் எண்ணியவாறு நூல் வெளிவந்து விற்பனைக்கு அணியமாகிவிடும். மேலும், அதன் அடக்கவிலையை முன்கூட்டியேமதிப்பிடுதற்கும் வாய்ப்பாக இருக்கும்."

அச்சிட்டு முடித்த படிவங்களையும், நூல்களையும், எப்படிப் பாதுகாப்பது என்பதைப் பற்றிய இவர்கள் கருத்தையும் இவ் விடத்தே தெரிந்துகொள்ளுதல் பயனுடையதாம்.

"அச்சிடப் பெற்றுவரும் தாள் கட்டுகளையோ, மடிக்கப் பெற்ற கட்டுகளையோ தரையில் வைக்கக்கூடாது. சிமெண்டும், செங்கல்லும் சேர்க்கப்பெற்ற திண்டுகள் ஓர் அடி உயரத்தில் செய்து அவற்றை இடைடையே நிறுத்தி மேலே, மாம்பலகை போட்டு, அப் பலகைமேல் இவற்றை வைத்தல் வேண்டும். தேக்குச் சட்டங்களால் உயரமும், அகலமுள்ள நிலைத்தாங்குகள் செய்து அவற்றின் தட்டுகளில், உருவான புத்தகக் கட்டுகளை வைத்தல் வேண்டும். கட்டுகளின் என்புறம் புத்தகப் பெயரும், படி