உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

73

எந்த ஒரு செயலும் நிறைவேறுதற்குக் காலமும் இடமும் கனிய வேண்டுவது இன்றியமையாதது; அவ்வகையில் எதிர் பாராமலும் காலமும் இடமும் கனிந்து கைகொடுத்து நன்மை செய்யும். அதனையே திருவருள் என்றும் ஊழ் என்றும் கூறுவர்.

திருவாளர் இராசகோபால்பிள்ளை இராலி உடன்பிறந்தார் (Rallis Brothers) நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவர் உடன் பறிந்தார் வேங்கடாசலப் பெருமாள் பிள்ளையும் அந் நிறுவனத் திலேயே பணிபுரிந்தார். தூத்துககுடியிலே தொடங்கிய திரு. இராசகோபால் பிள்ளையின் பணி, இராசபாளையம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய இடங்களுக்கு மாறி 1932 ஆம் ஆண்டில் சென்னைக்கு வாய்த்தது. அப்பொழுது அவர் சென்னை இராமசாமித் தெருவில் குடியிருந்தார். ஆதலால் வெள்ளூர் ஆண்டியப்பிள்ளை குடும்பமும், பாளை வயிரமுத்துப்பிள்ளை குடும்பமும் சென்னையில் நெருங்கி உறவாடுதற்கு வாய்த்தது. இவ் வாய்ப்பே பழைய உறவைப் புதுபபித்து வழிவழியாகத் தொடரும் வளத்தை ஆக்கிற்று.

மங்கையர்க்கு அரசியார் பெண்மைச்சிறப்பாலும் பெருகிய மனை மாண்பாலும் மங்கையர்க்கு அரசியாராகவே திகழ்பவர். "பங்கயச் செல்வி” என்றும், "திருநுதற் செல்வி” என்றும் “சிவன் திருநீற்றினை வளர்க்கும் பத்தியார்கின்ற பாண்டிமாதேவி" என்றும், "பண்ணின் நேர் மொழியாள்" என்றும், “பன்னலம் புணரும் பாண்டிமாதேவி” என்றும் ஆளுடையபிள்ளையா அருளின்மை போல அரும்பெரும் நலங்கள் எல்லாம் அமைந்து பெண்மையின் பெருந்திருவாக விளங்கினார். கணவரின் சீரும் சிறப்பும் பேரும் புகழும் பெருகுதற்கு ஏற்ற வாழ்க்கைத்

துணையானார்.

தனித்தமிழ்க் காவலராகத் திகழ்ந்தவர் திருவரங்கனார். அவரோ தனித்தமிழ் மலையாம் மறைமலையடிகள் திருமகனார் நீலாம்பிகையை உயிர்துணைவியாகக் கொண்ட உயர்பெரு செல்வர். அவர்தம் அருமைத்தம்பியார் வ.சு. திருமணம், எம் முறையில் நிகழ்ந்திருக்கும்?

செந்தமிழ்ப்புலவர் குழாம் சூழ்ந்திருக்க, அன்பர்களும் ஆர்வலர்களும், திரண்டிருக்க மணமக்களின் இருபெரு குடும்பத் தாரும் இனிதின் இணைந்திருக்க, திரு. சுந்தர ஓதுவாமூர்த்திகள் திருமணச் சடங்குகளைச் செவ்விதின் நிகழ்த்த, சிவாகம நெறிப் படியே செவ்விதில் திருமணம் நிகழ்ந்தது. திருமணம் நிகழ்ந்த நாள் 7-7-1935. (யுவ ஆண்டு ஆனித்திங்கள் 23 ஆம் நாள்