உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

“வெள்கினேன் வெள்கி நானும் விலாவிறச் சிரித்திட்டேனே'

""

-

என்னும் பெருநகையும் நகைக்கிறார் - இது நாவுக்கரசர் நகை.

வள்ளுவரும் திருத்தக்கரும் நாவரசரும் ஆகிய மூவரும் ஒருவராம் மூர்த்தியாம் நகையல்லவோ இவை!

வேலா தமிழ்த் தென்றலில் அமைந்து அமைந்து தளிர்க் கின்றார். அதனைத் திரு.வி.க.வே திருவாய் மலரக் கேட்போமே!

"தொல்லை நோய்க்கு மருந்துண்டோ? மருத்துவர் என்ன விடை இறுப்பரோ அறிகிலேன்! எனக்கொரு மருந்து துணை செய்து வருகிறது. அஃதென்னை?

அஃது எனது தாய்மொழி; அமிழ்தினும் இனிய தமிழ்மொழி; என்போன்றோர்க்கென்று தமிழ்க் கலைகள் தோன்றினவோ என்று யான் அடிக்கடி நினைப்பதும் உண்டு.

தொல்காப்பியனார்., நக்கீரர், நல்லந்துவனார், திருவள்ளு வனார், இளங்கோ, சாத்தனார், திருத்தக்கதேவர், மாணிக்கவாச கனார், நம்மாழ்வார், சேக்கிழார், கம்பர், பரஞ்சோதியார் முதலிய தமிழ் மருத்தவர் யான் நூல் எழுதும் சிற்றறையிலும் வீற்றிருக்கினறனர். அவர் முன்னேதொல்லை அணுகி எங்ஙனம் நோய் செய்யும்?

“அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்”

“மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு”

"குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச் சொல் கேளா தவர்”

இப்பாக்களில் சொல்லினும் பொருளினும் இரண்டும் கலந்த ஒருமையிலும் ஒன்றித் திளைக்கும்மனம், எந்நிலை எய்தும்? அம்மனத்தை தொல்லை நோய் உறுத்துங்கொல்” -திருக்குறள் விரிவுரை - பாயிரம் - அணிந்துரை. 8-9.

வேலாவை, தொல்லை நோய் உறுத்தவில்லை என்பதற்கு இதோ ஒரு சான்று; நிகழ்ச்சியில் பங்கு கொண்டு நேரில் கண்ட கழக ஆட்சியாளர் இரா. முத்துக்குமாரசாமி அவர்கள் கூறுகிறார்: