உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

'நல்லனவும் அல்லனவும், பொறுமையும் வெகுளியும், அறமும் பழியும், வாய்மையும் பொய்மையும் மாறி மாறி வந்த நிகழ்வுகளைக் கொண்டது அன்னை தம் வாழ்க்கை. நாணத்திற்கு இரு பக்கங்கள் உண்டு. எல்லா உள்ளங்களும் இருபக்கங்கள் கொண்டவைதாம். பண்பு உடைமையும் கயமையும் அந்த இருபக்கங்களாம். எவரொருவர் எவ்வெவ்வாறு எவ்வெவற்றை எஞ்ஞான்று ஆற்றுப்படுத்திக் கொள்கிறார்களோ அவ் வகைகளே அஞ்ஞான்று விளையும் என்னும் உலகவழக்கை உண்மையாக்கியதே அவர் தம் நெடிய வாழ்க்கை.

இனம் மொழி நாடு கடந்த மாந்த உள்ளமும் இவர்பால் லங்கியது. பிற்போக்குத் தன்மை வருணாசிரமப் போக்கு ஆகியவும் சிலகாலம் இவரை விழுங்கியிருந்தன. நெருக்கடி நிலை (மிசா), நயன்மை மறுப்பு, ஒறுப்புணர்வு ஆகியன இல்லாமல் இருந்திருந்தால்,வரும் ஓர் அண்ணல் காந்தி ஆகியிருப்பார். அரசியலில் ஈடுபடுவோர் ஒவ்வோருவரும் உய்த்துணர வேண்டிய ஏன்? கற்றுணர வேண்டிய வரலாற்றுப் பக்கங்களே அன்னையின் வாழ்க்கை. அத்தகு அரிய வரலாற்றை எதிர்கால மாந்த இனத்திற்கு அளித்த, நம் மறைந்த தலைமையமைச்சர் இந்திரா காந்தி அவர்களை நினைந்து நெடிய நினைவலைகளில் நீந்து கிறோம். அவர்தம் புகழில் நிற்க. அதற்குத் தக" என்பது அது

(5:5:27).

கவர்ச்சியே ம. கோ. இராவின் வெற்றி; அமைந்து விட்ட நல்ல தலைவிதியே ம.கோ. இராவின் பேறு; என்பனவெல்லாம் அறியாதவர்களும் புரியாதவர்களும் புகழும் சொற்கள், அழகுக் கவர்ச்சியோ அளவற்ற வீரமோ மட்டும் உலகில் எவரையும் நிலையான புகழுக்குரிய தன்மையில் வரலாறு படைக்கவில்லை. கிளியோ பாத்ராவும் மர்லின் மன்றோவும் செங்கிசுக் கானும் இட்லரும் இன்னும் பலரும் இதற்கு எடுத்துக் காட்டுகள். ஆனால் மறைந்த நம் தமிழக முதல்வர் ம.கோ. இரா. பெற்றிருந்த கவர்ச்சியோ ஓரளவு அவரின் வெற்றிகட்குத் தொலைவில் நின்றிருந்தாலும் அது முழுக் கரணியமாகாது என்பதை அவரின் வாழ்க்கைப் பாதையைத் தொடங்கும் நிலையில் இருந்து அணுகுவோர் உணரலாம்.

ஏழாம் அகவையில்நின்றுவிட்ட அவரின் கல்வி, நாடகங் களில் நடிப்பதன் மூலம் புராணக் கல்வியாக வளர்ந்தது.