உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

துணை நலம்

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

குறளியப் பணியை நோக்கும்போது, அதன் உள்ளீடாக இருந்து உணர்வோடு உழைத்த புலமையாளர்களை - உயிர்ப்புத் தொண்டர்களை செய்திகளை ஒழுங்குறுத்தி மெய்ப்புப் பார்த்த மேன்மையாளர்களை எண்ணாமல் முடியுமா? அவர்களை

-

முன்னரே கண்டுள்ளோம்.

குறளியக் கருத்துக் கொடைஞர்களை இவ்விடத்தே சுட்டுதல் தகும். பலரையும் சுட்டல் இயல்வதோ? முத்தமிழ்க் காவலர், தவத்திரு அடிகளார், திருக்குறளார், சிந்தனைச் செம்மல் கு.ச.ஆனந்தனார் என ஒரு நால்வரைச் சுட்டி அமைதல் சாலும்! மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் உணர்வுத் தொண்டும் ஊற்றமும் சொல்லாமல் தீருமா? தமிழ் வழிக்கல்வி இயக்க நிறுவனரும் வழிகாட்டியும் அவரே அல்லரோ!

ஆசிரிய உரைச்சீர்மை

குறளியத்தின் ஆசிரிய உரை, ஒவ்வொன்றும் ஆய்ந்து காணத்தக்க அத்தகு உணர்வு நிலையும் ஆக்க நிலையும் பொதுநல நோக்க நிலையும் நடைநல நிலையும் உடையவை. வேலாவின் நினைவு - சொல் - செயல் ஆகிய மும்மையும் ஒருமையாம் ஒரு சிறப்பின் வெளிப்பாடாக அமைபவை. ஆய்வு நோக்கில் தனித்தனி ஆய்வார் ஆய்ந்து கண்டு கொள்வாராக.

கண்டு கொள்ளுதல் என்பது அரும்பொருள். அக்கண்டு கொள்ளுதலுக்குப் பலப்பலர் கருவிகளைத் தந்து காட்டுவார் அல்லர். ஆனால், வேலாவைக் கண்டு கொள்ள வாய்துள்ள கருவிகள் மிக வெளிப்படையானவை; தெளிவும் மிக்கவை.

ஒவ்வொரு நொடியின் வாழ்வுக்கும், ஒவ்வோர் இயக்கத் திற்கும், ஒவ்வொரு நினைவுக்கும், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் குறள் நெறியே நெறியெனக் கொண்டவர் வேலா! அதன் வழியாலேயே குமுகாயமா, அரசியலா, பொருளியலா எவ்வியல் ஆயினும் தீர்வு காணலாம் என்றும் காண வேண்டும் என்றும் கண்டவரும் கொண்டவரும் வேலா ஆதலால் ஆசிரிய உரை ஒவ்வொன்றும் குறள் நெறி வழியதாகவே தலைப்பும் -விரிப்பும் - முடிப்பும் செய்விதின் இயலக் காட்டுகின்றார். இதன் விரியே ‘குறளாயம்’ என்பதை நாடறியும்; நாடு தழுவிய ஏடுகளும் அறியும். அக் குறளாயம், ஆட்சியைக் கொண்டால் கொள்ளும் நிலைமை

L