உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. தமிழ்வழிக் கல்வி இயக்கம்

"தமிழால் முடியும்" என்றவர்கள் ஆட்சிசெய்த போது, சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டுமென்று உண்ணா நோன்பு கொண்ட சங்கரலிங்கனார் உயிரைப் பலி கொள்ளவே முடிந்தது. பாலர் பள்ளி முதல் பல்கலைக் கழகம் ஈறாகப் பயிற்று மொழி தமிழாகவே இருத்தல் வேண்டுமெனக் கன்னி தொடங்கிச் சென்னை வரை நடைத் திட்டம் கொள்ளவிருந்த தமிழ் அரிமா இலக்குவனாரைச் சிறையுள் பூட்டியும் வேலையைப் பறித்தும் வெறியாட்டம் காட்டவே முடிந்தது.

"எங்கும் தமிழ்; எல்லாம் தமிழ்" என்று முழங்கியவர் காலத்திலே சென்னை மாநிலம் தமிழ் நாடாகியது ஒரே தலைவர் ஆனால்... தமிழ் வழிக் கல்வி இயக்கம் தோற்றித் தெருத் தெருவாகக் கூட்டம் போட்டு வலியுறுத்தவும், ஊர்வலம் போகவும் அறிக்கைகள் விடுக்கவும் ஆகிய நிலையே இன்றும் தொடர்கின்றது.

-

தமிழ்நாட்டில் தமிழில் கற்பிக்க என்பதற்கொரு போராட்டம் தமிழில் பாடு; தமிழில் ஓது; தமிழில் பலகை வை; தமிழில் பேசு; தமிழில் எழுது; தமிழனாக இரு என்பவற்றுக்கெல்லாம் அமைப்புகள், போராட்டங்கள்ஒரே தலைவர் இதனை விந்தை என்பதா? வேடிக்கை என்பதா? விளையாட்டுத் தனம் என்பதா?

தமிழ் வழிக் கல்வி இயக்கம் என்னும் பெயரே, அதன் நோக்கத்தையும் ஆக்கக்கருத்தையும் தெரிவிக்குமேஒரே தலைவர் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவராய், துணை வேந்தராய் பணியாற்றி ஓய்வு நாளிலும் ஓயுதல் செய்யோம் தலைசாயுதல் செய்யோம்' எனப் பேராசிரியர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் தோற்றுவித்து, உயிர்ப்பும் உணர்வுமுடைய இயக்கமாக ஆக்கிய அமைப்பு தமிழ் வழிக்கல்வி இயக்கம். அதன் நிறுவனரும் தந்தையும் அவரே !