உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணநலத் தோன்றல் குப்பு முத்துஐயா

வள்ளல் நள்ளி

ஒரு மலையின் அடிவாரம்

அழகான காட்டுப் பகுதி

சலசலக்கும் ஆறும் அருவியும் அமைந்த சூழல்

வளமான பலாமரம் ஒன்று வாய்ப்பாக இருந்தது.

கால் கடுக்க நடந்து வந்த அந்த முதியவர் அந்த மரத்தின் அடியிலே அமர்ந்து இளைப்பாறினார்.

அவர் மட்டும் வரவில்லை.

அவர்தம் உற்றார் உறவினரும் உடன் வந்தனர்.

அவர்களுக்கும் நடைக்களைப்பு இல்லாமல்

ல்லை.

ஆதலால், பெரியவரைச் சார்ந்து அவர்களும் அமர்ந்தனர். பகற்பொழுது ஆயினும் பசியும் களைப்பும் சேர அவர்கள் அயர்ந்து கண்ணை மூடிக்கிடந்தனர்.

தம் அயர்வையும் பசியையும் கூட மறந்து தம் உற்றார் உறவினர் பெண்டு பிள்ளைகளின் அயர்வுக்கும் பசிக்கும் பெரியவர் வருந்தினார்.

அந்நிலையில் அவர் முன்னே கட்டிளங்காளை ஒருவன் தோன்றினான். அவனைப் பார்க்கவே வளமான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பது புலப்பட்டது.

வில்லும் கையுமாக நின்றான் அவன்

வேட்டைக்கு வந்தவன் போலும்!

அவனைக் கண்ட அளவில் பெரியவர் எழுந்தார்.

அவர் முதுமையையும் அயர்வையும் உணர்ந்த இளைஞன் "எழவேண்டாம்" என்று கைகாட்டி அமரச் செய்தான்.