84
இளங்குமரனார் தமிழ் வளம் – 3 3
உளவாதல் அவ் விருவகைக் கருத்தினும் தமிழ் மொழியில் பற் பல வகையாக வழங்கி வந்திருத்தல் கொண்டுந் தெளிந்து கொள்ளலாம். நீர் இளக்கமாய் இருத்தலால் அது மேடுகளிலும் பள்ளங்களிலும் ணைந்தமைந்து நிறைதலும் மேலும் ஒழுகு நீரெனப் படு
தொடர்ந்து செல்லலும் உடையதாய்
கின்றது.
கட்டிப்பட்ட
இயல்பினவான பொருள்கள் தந்நிலை நெகிழ்ந்து உருகி இளக்கங் கொள்ளலை ஒழுகுதல்' என்ற லானும், பொற்கட்டி முதலியன நீளக் கம்பியாக நீட்டுதற்குரிய மென்பதனுற்று வருதலை ‘ஒழுகு நீட்சி' என்றலானும், இனி தான செய்யுளோசையை 'ஒழுகிசை' என்றலானும், மெதுவாக நகர்ந்து தொடரும் உப்பு வண்டிகளை ‘ஒழுகை' என்றலானும், ஒருவருக் கொருவர் அழகு காட்டி விளையாடுதலை “ஒழுங்கு காட்டல்' என்றலானும், நேரொன்றாசிரியத் தளையும், நிரை யொன்றாசிரியத்தளையும் விரவி அமையும் செய்யுளோசையை “ஒழுகிசையகவல்” என்றலானும் இரண்டறக் கலந்து ஒன்றாய் விடும் இணக்கத்தை ‘ஒழுகு நட்பு' என்றலானும் பிறவாற்றானும் ஒழுகுதல் என்னும் மொழியில் இளக்கம், மென்மை, இனிமை, அமைதி, அழகு, விரவல், பிரிவறல் முதலிய இணைந்தமைந்து மாண்புறுதற் கேதுவான நேர்மைப் பண்புகளெல்லாம் ஒக்கக் கனிந்தொழுகுதல் கண்டு கொள்ளப்படும்.
நேர்மையின் அடியாகவே அது நீளத் தொடர்ந் தொழுகும் ஆற்றலும் உற்று, நெடுமைப் பொருள் உணர்த்தி வருதலும் தமிழிற் பலவாகும். பொருள்களை வரிசையாக நீள வைத் தலையும், கம்பி முதலியவற்றை நீட்டுதலையும் ‘ஒழுக்கல்' என்ப. தொடர்ந்து நீளச் செல்லும் எறும்பினை ‘ஒழுக்கெறும்பு' எனவும் வழங்குப. இறைவற்குத் தொடர்பாக நாடோறும் படைக்கும் அவித்த உணவினைத் திருக் கோயிலில் ‘ஒழுக்கவி’ எனலும், நீளத் தொடர்ந்தோடிப் பயிர்கட்குப் பாயும் வாய்க் கால் நீரை “ஒழுக்கு நீர்” எனலும், தொடர்ந்த விளை நிலங்களின் பயிர்க் கணக்கை ‘நடை ஒழுங்கு' எனலும் வழக்காம்.
(சங்க நூற் கட்டுரைகள் II. 110 - 113.) ஒழுகுதல் : மன மொழி மெய்களை ஒடுக்கி ஒப்புரவு முதலிய செய்து போதல். (திருக். 974. பரி.)
ஒழுக்காறு: ஒழுக்கமாவது செலவு; நடக்கை எனினும் ஆம். ஓரிடத்தை நாடி நடந்து செல்வோர் ஆறலை கள்வரும், நஞ்சுடை அரவமும், நெஞ்சுடை உருவின் அஞ்சுவர மண்டும் விலங்கின