உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

93

கண்ணன்: கரியோன் என்னும் பொருளதோர் பாகதச் (திருக்கோ. 53. பேரா.)

சிதைவு.

கண்ணழித்தல்: கண்ணழித்தல் என்பது பதப்பொருள் (இறையனார். 1. நச்)

சொல்லுதல்.

கண்ணாலக் காணம்: கண்ணாலக் காணம் என்பது கல்யாண வரி என்றும், அது திருமண நாளில் மணமகனும் மணமகளும் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய அரைக் கால் பணமேயாம் என்றும் ஈரோட்டிலுள்ள முதற் பராந்தக சோழன் கல்வெட்டொன்று உணர்த்துகிறது.

(முதற்குலோத்துங்க சோழன். 88.)

கண்ணி: (1) கண்ணி என்பது சூடும்பூ.

(தொல். பொருள். 634. பேரா.)

(2) ஆடவர் தலையில் சூடுதற்குரிய மாலை. (புறம். 1. ப.உ) (3) கண்ணி = கண் கண்ணாய்ப் பூவைத் தொடுத்துத் தலையிற் சூடும் தொடை

தார் = மார்பில் அணியும் கட்டிமாலை

கோதை

பூமாலைப் பொதுப்பெயர்

தொடலை = தழை மாலை

ஆரம்

=

முத்துமாலை

மாலை = மாலைப் பொதுப்பெயர்

(புறம். 1).

(புறம். 1.)

(புறம்.48.)

(புறம். 271.)

(புறம். 19)

(YML. 95.)

(புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 337-8)

கண்ணுமை: கண்ணுமை, கண்ணுதல் அடியாகப் பிறந்த பண்புப்பெயர். கண்ணுதல் - கருதல். ஆளுதல் ஆண்மை எனவும், புகழ்தல் புகழ்மை எனவும் வருதல் போன்றது.

(தொல். பொருள். புறத்திணை. 21. ச.சோ)

கண்ணுள் வினைஞர்: நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்தலில் கண்ணுள் வினைஞர் (சித்திரகாரிகள்) என்றார். (மதுரை. 517. நச்.)

கண்ணோட்டம்: (1) கண்ணோட்டமாவது கண்ணால்

காணப்பட்டாரை அருள் செய்தல்.

(திருக். கண்ணோட்டம். மணக்க பரிப்.)