சொற்பொருள் நுண்மைவிளக்கம்
101
வான்தளை தட்டிசை தனதாகியும்" என்ற காரிகையையும் நோக்குக. களை, தளை என்பன பெயராயும் நிற்கும். கனை என்பதனின்று கன்னல், கமை முதலிய பெயர்கள் பிறக்கும். கன்னல் - சருக்கரை. “செறிந்திடு கன்னல்" (கந்த புராணம்).
(செந்தமிழ். 11- 120.)
களைகண்: களைகண் = புகல்; பற்றுக்கோடு. துன்பத்தைக் களையும் இடம் எனக் காரணக்குறி, வினைத்தொகை.
“கற்றிலேன்; களைகண் இல்லேன்; கடவூர் வீரட்ட னாரே"
- அப்பர் தேவாரம்.
(செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 2-79)
கறி: கருனை என்னும் பொருளில் வரும் ‘கறி' என்னும் சொல் நாவிற்குச் சுவை உறுத்தி உறைத்தலை விளக்கும் ஆதலின் அச்சொல்லையே தனக்குப் பெயராக உடைய மிளகு காயின் விழுப்பமும் அதனால் அதுவே கறிக்கு முதன்மை ஆதலும் தாமே பெறப்படும் அன்றோ? 'கறிவளர் சிலம்பு’ எனவும், "கறிவளர் அடுக்கம்’, எனவும், "கறிவளர் சாரல்" எனவு மெல்லாம் மலைக்கே அடைமொழியாகவும் கொள்ளப்படும்.
(சங்கநூற் கட்டுரைகள். II - 38.)
கறித்தல்: மெல்லக் கடித்தல் வலுவாய்க் கடித்தல் “மடப் பிணை..... வேளை வெண்பூக் கறிக்கும்” புறம். 23.
(புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 337)
கன்னம்: கன்னம் என்பது நோய் தணித்தற்குப் பண்ணிக் காடுக்கும் படிமம் (ஐங்குறு பழையவுரை) இக் காலத்துத் தாயத்துப் போல்வதொரு பொருள்.
•
(ஐங்குறு. 245. விளக்கம். பெருமழை.)
கன்னல்: நாழிகைவட்டில்; இஃதிப் பொருட் டாதல் "கன்னலுங் கிண்ணமும் நாழிகைவட்டில் என்னும் பிங் கலந்தைச் சூத்திரத்திற் காண்க. “குறுநீர்க் கன்னலின் யாமங் கொள்பவர்” என்றார் மணிமேகலையிலும் (764). ஒரு கடாரத் திலே நீரை நிரப்பி அடியிற் சிறு தொளையுள்ள ஒரு வட்டிலை இட்டாற் கடாரத்து நீர் அப்புழை வழியே வட்டிலினுள் ஊறும்; அங்ஙனம் ஊறும் நீரின் அளவுக்குத் தக நாழிகை கணக்கிடுவர். (முல்லைப். ஆரா. 72.)