சொற்பொருள் நுண்மைவிளக்கம்
105
கால்: உடம்பின் உறுப்புக்களுள் ஒன்றனுக்குக் கால் எனப் பெயர் வைத்து வழங்குவது எளிது. ஒன்றை நான்கு பகுதியாகப் பிரித்து அந்த நான்கில் ஒரு பகுதியைக் கால் என வழங்கும் நுண் கருத்தே அருமையுடையது. (மு. வ. மொழி வரலாறு: 92)
கால்வாய்: கால்வாய் - மூங்கிற் குழலால் ஆவது.
மலை ஊற்றில் இருந்து மூங்கில்களை ஒன்றோடு ஒன்று பொருத்தி அரண்மனை முதலியவற்றுக்கு நீர் கொண்டு வந்தமை யின் கால்வாய் எனப் பெயர் வந்தது. வாய் - வாய்ப்பச் செய்வது. ங்ஙனம் சீனதேயத்தாரும் செய்வர். நீலகிரித் தொதவர்களும் ஒருசார் இங்ஙனமே செய்வர்.
(மொழிநூல் (கார்த்) இலக்கணவியல். 154)
காலதர்: கால் என்றால் காற்று. அதர் என்றால் வழி. காலதர் என்றால் காற்று வரும் வழி. இக்காலத்தில் பேச்சு வழக்கில் இல்லாத அதர் என்ற சொல்லைத் திருக்குறள் முதலிய பழைய நூல்களில் காணலாம்.
66
'ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை
என்றார் திருவள்ளுவர்.
(தமிழ் விருந்து. 90.)
கடமை
காவலன்: அரசனைக் காவலன் எனக் கூறுவதும், ஒரு வகையான் நோக்கினால் உழவின் அடியாகப் பிறந்தது எனத் தோற்றும். “நீரினும் நன்றதன் காப்பு" என்றவிடத்துத் திரு வள்ளுவர் வயல்களை நன்றாகப் பாதுகாக்கும் யுடையவன் உழவன் என்றார். வயல்களிற் பயிர்களை உழவன் பாதுகாத்தலைப் போல அரசன் குடிமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு உடையவன். வயல்களில் உள்ள பயிர்களுக்குத் தன்னாலும், தன் சுற்றத்தாராலும் பகைஞர்களாலும், திருட ராலும், பிறஉயிர்களாலும், வரக்கூடிய தீமை இல்லாமல் பாதுகாக்கும் கடமை உடையவன் உழவன். அவனைப் போலவே அரசனும் தன் குடிமக்களைப் பாதுகாக்கும் பொழுது இவ் விடை யூறுகள் நிகழாதவாறு பாதூக்கும் கடமையுடையவன். க் கருத்து,
மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலை தானதனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால் ஆனபய மைந்துந்தீர்த் தறங்காப்பா னல்லனோ”