உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

107

கி

கிழக்கு: கிழக்கு என்றது கீழான பள்ளங்களை.

(பதிற்று. 36. ப.உ.)

கிளத்தல்: கிளிபோல் மழலை மொழியாகப் பேசுதல். (திருவருட்பா விரிவுரை. நெஞ்சறி. 3.)

(கிளத்தல்)

கிளவியாக்கம்: (1) கிளவியது ஆக்கம் என விரியும், அதற்குப் பொருள் சொல்லினது தொடர்ச்சி என்றவாறு. சொற்கள் ஒன்றோடு ஒன்று தொடர்ந்து பொருள்மேல் ஆகும் நிலை மையைக் கிளவி ஆக்கம் என்றார். (தொல். சொல். 1. தெய்வ. ச்)

(2) வழுக்களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமை யான் கிளவியாக்கம் ஆயிற்று. ஆக்கம் - அமைத்துக் கோடல். நொய்யும் நுறுங்கும் களைந்து அரிசி அமைத்தாரை அரிசி ஆக்கினார் என்ப ஆகலின். சொற்கள் பொருள்கள் மேல் ஆமாறு உணர்த்தினமையால் கிளவியாக்கம் ஆயிற்று எனினும் அமையும். (தொல். சொல்: 1. சேனா.)

கிளிகடிகருவி: தழல், தட்டை, குளிர் என்பன.

(தழல் கிளியோட்டும் கருவி) சுற்றுவதனால் ஓசை உண்டாகும்படி பிரம்பினால் அல்லது சூரற்கொடியினால் பின்னப் பெறுவது.

தட்டை: தட்டுவதனால் ஓசை உண்டாகும்படி மூங்கிற் பிளவுகளால் செய்யப்பெறுவது.

குளிர்: இழுத்துவிடின் ஓசை உண்டாகும்படி மூங்கிற் பத்தைகளால் செய்யப் பெற்ற கருவி. இவையனைத்தும் கிளி கடி மரபின. (குறிஞ்சிப்பாட்டு விளக்கம். 54) கிளை: கிளை என்பது முதன் முதல் மரத்தின் கோடு களுக்கே பெயராக வழங்கப்பட்டதாகும். ஒரு மரமும் அம் மரத்தினின்று பல கவர்களாகப் பிரியுங் கிளைகளும் ஒன்றை விட்டொன்று வேறாகாமற் பெரிதும் இயைந்து நிற்கின்றன. இங்ஙனமே ஒருவனுக்குக் கிளைகள் போல் நெருங்கிய தொடர்