சொற்பொருள் நுண்மைவிளக்கம்
109
குட்டம்: குட்டை
-
-
கு
குட்டம். ஒ. நோ. பட்டை
-
பட்டம்.
தட்டை தட்டம் செய்யுள் அடிகள் குறளும் சிந்துமாய்க் குறுகி வருவது குட்டம்படுதல் என்றும் கைகால் விரல்கள் அழுகிக் குட்டையாகும் தொழுநோயும் குரங்குக் குட்டியும் குட்டமென்றும் கூறப்படுதல் காண்க. குட்டத்தைக் குஷ்டம் என்பர் வடநூலார். ஒ.நோ. கோட்டம் - கோஷ்டம் (வ) முட்டி - முஷ்டி (வ) (ஒப்பியன் மொழிநூல். 161)
குட: குட என்பது தட என்பது போல வளைவை உணர்த்துவதோர் உரிச்சொல். (முருகு. 229. நச்.)
குடங்கை: ஐந்து விரலுங்கூட்டி உட்குழிப்பது. என்னை?
66
"குடங்கை என்பது கூறுங் காலை
உடங்கு விரல்கூட்டி உட்குழிப் பதுவே”
(சிலம்பு. 10–85. அடியார்.)
குடச்சூல்: சூல் உற்றதுபோல் புடைப்பட்டிருக்கும் சிலம்பு.
(அகம். 198. வேங்கட விளக்கு)
குடாவடி: குடாவடி என்பது சிலப்பதிகாரத்திலும், மலை படுகடாத்திலும் கரடியின் குட்டியைக் குறித்தே வழங்கி யிருப்பதைக் கவனித்தால் இது கரடிக்குட்டிக்கு வழங்கிய திசைச் சொல் என்றே தெரிகின்றது. கரடிக்குட்டிக்குத் தெலுங்கு மொழியில் குட்டெலுகு என்று பெயர் வழங்குகின்றது. கு குடா எலுகு என்பது குட்டெலுகு என மாறி இருக்கலாம். எலு என்ற சொல் நிகண்டுகளில் கூறப்பட்டுள்ளது. ஆகலின் குடாவடி என்ற சொல் கரடியின் குட்டியைக் குறிக்கும் திசைச் சொல் என்பது பொருத்தமானதாகும்.
(சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 212.)
குடி: (1) குடி என்பது குடும்பம்; அஃதாவது ஒருவனைச் சூழ்ந்த அகச்சுற்றம். குலம் என்பது புறச்சுற்றம்.
(திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை. 78.)