சொற்பொருள் நுண்மைவிளக்கம்
கவிகை: வளைந்து மூடலிற் கவிகை எனப்பட்டது.
111
(செந்தமிழ் -தொகுதி. 4 - 112) குணம்: பொருட்குப் பண்பாய்த் தனக்கு வேறு பொரு (தண்டி. 40. சுப். தே.)
ளின்றிப் பொருளை நீங்காது நிற்பது.
குணவாயில்: திருக்குணவாயில் என்பதோர் ஊர்; அது வஞ்சியின் கீழ்த்திசைக்கண் உள்ளது. அஃது ஆகுபெயர் அது குணக்கண்வாயில் குணவாயில்; குணக்கன்கண்வாயில் குண வாயில் எனச் சாரியை பெறாதும் பெற்றும் வரினும் அமையும். (சிலப் – பதகம். 1-2. அடியார்.) (திருக்கோ. 104. பேரா.)
குதலைமை:
விளங்காமை.
குமரன்: குமரன் என்பதும் தமிழ்ச்சொல்லே. குமரி பெண்பால். குமரிமுனையும், குமரிநாடும், குமரிமலையும், குமரியாறும், குமரிக்கண்டமும் ஆரியர் வருகைக்கு முன்னே, ஏன் அவர்கள் தோன்றுவதற்கு முன்னே தமிழ் பெற்றிருந்தவை களாம். குமரியைத் தமிழ்ச்சொல் அன்று என்று எவரும் கூறார். அதன் ஆண்பாற் சொல்லே குமரன் என்பதாம் இவையிரண்டும் பின்னர் வடமொழிக்கண் சென்று குமாரி என்றும் குமாரன் என்றும் உருப்பெற்றன. (பழந்தமிழ். 131.)
குயவரி: குயம்போலும் வரிகளையுடைய புலி; குயம் (அகம். 398. வேங்கட விளக்கு)
அரிவாள்.
குயில்: குயில் கூவுகிற ஒலிக்கும், குயில் என்ற பெயருக்கும் இப்போது பொருத்தம் நன்றாக விளங்கவில்லை. “கூஊ இல்" என்பது போன்ற அதன் ஒலியே நாளடைவில் குயில் என்று சுருக்கமாகத் திருந்திய வடிவு பெற்றிருக்கலாம்.
(சொல்லின் கதை. 8.)
குய், வறை: குய் - தாளிக்குங்கறி; வறைகள் - துவட்டின கறிகள். (சீவக. 2971.நச்)
குரங்குதல்: வளைதல். “மாரியங் குருகின் ஈரிய குரங்க.” (அகம். 235. வேங்கட விளக்கு.)
குரவை: குரவை என்றது காமமும் வென்றியும் பொரு ளாகக் குரவைச் செய்யுள் பாட்டாக எழுவரேனும், எண்ம ரேனும் ஒன்பதின்மரேனும் கைபிணைந்து ஆடுவது.
(சிலப் -3:12. அடியார்.)