உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

இளங்குமரனார் தமிழ் வளம் – 3 3

கோடி: கோடு - கோடி = கடைசி, கடைசி எண்.

கோடியர்:

(புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 354)

-

கூத்தர், கோடு ஊது கொம்பு. அதனை (நற். 212. அ. நாராயண.)

யுடைமையிற் கோடியர் எனவுமாம்.

கோலாகலம்: முறை பிறழ்ந்த நிலை; இச்சொல் ‘கோலாலம்' எனத் திருவாசகத்தில் வந்துள்ளது. "கோலாலமாகிக் குரைகடல் வாய் அன்றெழுந்த ஆலால முண்டான்” (திருச்சாழல் - 8) இஃது ஒலிக்குறிப்பு. வடசொல் அன்று. (திருவொற்றி முருகர்: 141.)

கோவன்: ஆயன் ஆக்களைக் காப்பதுபோல அரசன் மக்களைக் காத்தலால் அரசனுக்குக் கோவன் என்று பெயர் கோவன் என்பது முறையே கோன் -கோ எனத் திரியும். கோ- பசு.கோக்களை மேய்ப்பது பற்றி ஆயனுக்குக் 'கோன்' ‘கோனார்’ என்னும் ஒருமைப் பெயரும், உயர்வுப் பன்மைப் பெயரும் வழங்குதல் காண்க. ஆயனைக் குறிக்கும் கோன் என்னும் சொல்லும் அரசனைக் குறிக்கும் கோன் என்னும் சொல்லும் ஒன்றே. அரசனுக்கும் குடிகட்கும் உள்ள தொடர்பு ஆயனுக்கும் ஆநிரைக்கும் உள்ள தொடர்பு போன்றது என்பதே கோன் என்னும் சொல்லால் குறிக்கப்படும் கருத்தாம்.

கு

அரசன் கையிலுள்ள கோலும் ஆயன் கைக்கோல் போன்றதே. கோல் என்னும் சொல் ஆகுபெயர்ப் பொருளில் அரசாட்சியைக் குறிக்கும். நேர்மையான ஆட்சி செங்கோல் என்றும், கொடுமையான ஆட்சி கொடுங்கோல் என்றும் சொல்லப்படும். இனிச் சிவபெருமானும் உயிர்களை எல்லாம் காப்பதில் ஆயனை அல்லது அரசனை ஒப்பவராதலின் கோவன் எனப் படுவர். உயிர்களை அல்லது ஆன்மாக்களைப் பொதுப்படப் ‘பசு’ வென்பதும், சிவபெருமானைப் ‘பசுபதி’ என்பதும் வட மொழி வழக்கு. (சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள், 4,5.)

கோழரை:

·

வழுவழுப்பான அரை. அரை, அடிமரம் கோழரை, பொரியரை, பொகுட்டரை, முள்ளரை என்னும் நால்வகை மரவகைகளுட் கோழரையும் ஒன்று.

(திருவொற்றி முருகர் மும். 143)

(புறம். 58. ப.உ)

கோளி: கோளி என்றது பூவாது காய்க்கும் மரம்.