உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

3

செ

செங்கோல்: (1) செவ்விய கோல் போறலின் செங்கோல் (திருக். 390 பரி)

எனப்பட்டது.

(2) செங்கோல் - அம்பு. அஞ்சிப் புறம் கொடுத்தார், அடைக்கலம் என்றார், முதலியவர்பாற் செல்லாமைச் சிறப்பால். (குறுந். 1. சௌரி.)

செங்கோன்மை: (1) செங்கோன்மையாவது செவ்விதாகிய முறை செய்தல் உடைமை. குற்றமும் குணம் தூக்கி ஆராய் தலால் கோல் என்றார். அது கோடாமையால் செங்கோல் ஆயிற்று. (திருக். செங்கோண்மை. மணக்.)

(2) ஒருபால் கோடாது கோல் போறலின் செங்கோல் எனப்பட்டது. (திருக். செங்கோண்மை. பரி.) செஞ்சாந்து: செஞ்சாந்து என்பது குங்குமப்பூ முதலான சிவந்த மணப்பண்டங்களால் கூட்டப்படும் கூட்டு.

(திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை. 117) செதும்பு: சிறுகி ஒழுகும் புனல். (நாலடி. 128. பது. விள. உ) செந்தமிழ்: செந்தமிழ் - செவ்விய புனல்.

(நாலடி. 128. பது. பிள. உ)

செந்நா: பொய் கூறாமையிற் ‘செந்நா' என்றார்.

(புறம். 148. ப.உ)

செப்பம்: சொல்லும் கருத்தும் செயலும் மாறுபடாமை.

(திருக். 951. ப. உ.)

செப்பு: செப்பு என்பது உத்தரம் என்பதனோடு ஒரு

பொருட் கிளவி ஆகலானும், வினாய பொருளை அறிவுறுத்

தலே இலக்கணமாம்.

(தொல். சொல். 13. சேனா.)