உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

இளங்குமரனார் தமிழ் வளம்

3

செல்வம்: செல்வம் என்பது நுகர்ச்சி.

(தொல். பொருள். 259. பேரா.)

செலவு: இருமுது குரவரால் கொண்டாடப்படுதல்.

(திருக்கோ. 268. பேரா.)

செவ்வழி: செவ்வழி என்ற இசையின் பழைய பெயர் முல்லைப்பண் ஆகும். இஃது இக்காலத்தில் பாடப்பெறும் மோகன இராகம் என்பர்..... இராகங்களைப் பெருக்க இது (செவ்வழி) சரியான வழிகாட்டியதால் இது செவ்வழி, செம்மை யான வழி (correct path) எனப் பெயர் பெற்றது.

செவியறிவுறூஉ:

அவனை வாழ்த்துதல்.

(கழகப் பொன்விழா மலர். 23.)

ஒருசாத்தற்குச் செவி அறிவுபடுத்து (தொல். பொருள். 423. பேரா.)

செறிவு: செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை.

(கலி. 133.)