உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுப்பாசிரியர் முன்னுரை

தமிழ்ச்சொல் இயற்கையில் கருக்கொண்டது; இயற்கை ஒலியில் பிறந்தது; இயற்கை வடிவில் அமைந்தது; இயற்கைப் பொருளமைதியும் இயைந்த பொருட் பொருத்தமும் செறிந்தது; உள்ளுவார் உள்ளத்தைக் கொள்ளை காள் ள காண்டு இன்ப வெள்ளத்தில் திளைக்க வைப்பது. "இயற்கையிலே கருத்தாங்கி இனிமையிலே வடிவெடுத்”தது என்பது தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தேன்மொழி.

உரையாசிரியர்கள் கண்ட கண்ட சொற்பொருள் நுண்மை விளக்கம் (அகரவரிசை) என்பது இத்தொகை நூற்பெயர். இப்பெயரே இதன் உள்ளுறையைத் தெள்ளிதில் விளக்க வல்லதாம். இந் நன் முயற்சியில் என்னை ஊக்கிய அன்னைத் தமிழின், “திறம் வியந்து செயல் மறந்து” வாழ்த்துகிறேன்.

“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்பது முழுமுதல் இலக்கணப் பேராசான் உரை. அவ்வுரையைச் செவ்விதின் உணர்ந்த ‘நுண்மாண் நுழைபுல' நூலாசிரிய உரையாசிரிய பெருமக்கள் தத்தம் நூலகத்துத் தாம்தாம் எடுத்துக் கொண்ட பொருள்களுக்கேற்ப, ஆங்காங்குச் சொற்பொருள் விளக்கம் காட்டியுள்ளனர். அவர்கள் தம் நூலகத்துச் செறித்து வைத்துள்ள அருவிலைப் பெருமணிக் கலன்களுள் என் கைக்கு எட்டிய ஒரு சிலவற்றை ஒருங்கு தொகுத்து மணிமாலை ஆக்கிவைத்த ஒன்றே என் பணியாம். ஆங்காங்குக் கிட்டிய சிற்பங்களைத் தொகுத்து வைத்து எழிலும் ஏற்றமும் மிக்க கலைக்கோயிலைத் தஞ்சையில் உருவாக்கி விடவில்லையா! அத்தகைய இனிய பயன்மிக்க - பணியே இது. முற்றுமுடிந்த பணியன்று; தொடக்கப் பணியே! அன்றித், தூண்டற் பணியும் ஆம்.

-

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி”யாக நூன் மலர்களை நாடினேன். நோக்கிய இடமெல்லாம் “பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய, மாமலை பயந்த காமரு மணியும்" தொகுத்து வைத்தாற்போல் அமைந்த நூல்களையும் கண்டேன். பன்னூறு பக்கங்களைப் புரட்டியும் ஓரிரு சொற்பொருள்

-