சொற்பொருள் நுண்மைவிளக்கம்
163
தோ
தோகை: தோகை என்னும் சொல் 'தொகை' என்பதில் இருந்து தோன்றியது. தொகுத்தல் தொகையாகும். பகுதியுடன் ஐ விகுதி சேர்ந்து பெயராவது தமிழில் சொல் தோன்றும் முறையாகும். பகு+ஐ= பகை; வகு+ஐ=வகை; நகு+ஐ= நகை; முகு+ ஐ= முகை; இவ்வாறு பல சொற்கள் மிகமிகப் பழங் காலத்திலேயே உருவாகியுள்ளன. அங்ஙனமே தொகு+ஐ= தொகை என்றாகியுள்ளது. மயிலிறகுகள் வாலின் பகுதியில் தொகுத்து வீழ்வதால் மயிலிறகின் தொகுப்பு, தொகையாகிப் பின்னர் தோகையாகியது. பின்னர், ஆகுபெயரால் அத் தோகையையுடைய மயிலுக்குப் பெயராக ஆகியுள்ளது. இவ் வாறு ஆவதை, “சினையிற் கூறும் முதலறி கிளவி” என்பர். தொல்காப்பியர். பிற்காலத்தார் சினையாகுபெயர் என்பர். மயிலுக்குச் சிறப்பு அதன் தோகையால் தான். ஆதலின் அப் பெயர் அதற்கு மிகவும் ஏற்றதாக இலக்கியங்களில் அமைந்து விட்டது. தோகை எனும் இச்சொல் வெளிநாட்டில் துகி என்றும் தூகி என்றும் உருமாறி வழங்கியுள்ளது.
(பழந்தமிழ். 170-1)
தோட்கோப்பு: (1) ஆற்றுணவு. தோளின் கண்ணே கோக் கலால் தோட்கோப்பு என்று பொதிசோற்றுக்குப் பெயராயிற்று. (நாலடி. 20. பதுமனார்.)
(2) கோப்பு என்பது சுழலுதல் பேர்; தோளிலே கொண்ட கட்டுச்சோறு நடக்குந்தோறும் சுழலும் அதனால் தோட் கோப்பு என்றார். (நாலடி. 20. தருமர்)
(3) பொதிசோறு முடிந்த முடிச்சு, நடக்குந்தோறும் தோளின்கண்ணே சூழ்தலால் தோட்கோப்பும் என்றார் பிறரும்.
(நாலடி. 20. விள. உ.)
தோட்டி: தோட்டி - அங்குசம். ‘சரணங் கணிச்சி அங்குசந் தோட்டி' என்பது பிங்கலந்தை. தொடுத்தல்
-
6
வளைதல்;