உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

இளங்குமரனார் தமிழ் வளம் 3

(2) அணிகலன் தமக்கும் பிறர்க்கும் மகிழ்ச்சியை அளித்த தனால் அதனை நகை என்றும் அழைத்தனர் போலும்.

(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல். 96.) நட்டுவக்காணி: நிருத்தம் வல்லார்க்குக் கோயில்களில் அளிக்கப்பெறும் இறையிலி நிலங்கள் நட்டுவக் காணி எனவும் நிருத்தபோகம் எனவும் அக்காலத்தில் (சோழர் காலத்தில்) வழங்கியுள்ளமை அறிக. (பிற்காலச் சோழர் சரித்திரம்.II. 165.)

நட்பு: நட்பு என்பது நள் என்னும் பகுதி அடியாகப் பிறந்த பெயர். நள் - நெருங்கு, கூடு. இக்கூட்டம் மனத்தானும், மொழி யானும், மெய்யானும் ஆம். (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு 3: 318.)

நடுக்கம்: நடுக்கம் என்பது, அன்பும் அச்சமும் முதலாயின உ ம்பில் புலப்படுமாற்றான் உள்ளம் நடுங்குதல். புதல்வர்க்குப் பிணி இல்வழியும் எவனாங்கொல் என்று நடுங்குதல் அன்பான் நடுங்குதலாம். அச்சம் என்னும் சுவை பிறந்த பின்னர் அதன் வழித் தோன்றிய நடுக்கம் அச்சத்தால் தோன்றிய நடுக்கமாம் என்பது. (தொல். பொருள். 260. பேரா.)

நடுவுநிலை:

நடுவுநிலை என்பது ஒன்பது சுவையுள் ஒன்றென நாடக நிலையுள் வேண்டப்படும் சமநிலை. அஃதாவது, “செஞ்சாந்து எறியினும் செத்தினும் போழினும்

நெஞ்சோர்ந்து ஓடா நிலைமை”

அது, காம வெகுளி மயக்கம் நீங்கினோர் கண்ணே நிகழ்வது. (தொல். பொருள். 260. பேரா.)

நடுவுநிலைமை: (1) காரணம் பற்றி ஒருபாற் கோடாத மனத்தோடு கூடுமாயின் அறங்கிடந்தவாறு சொல்லுதல் நடுவு நிலைமையாம். எனவே அதனோடு கூடாதாயின் அவ்வாறு சொல்லுதல் நடுவு நிலைமையன்று. (திருக். 119. பரி.)

(2) பகை, உறவு, பொது, நட்பு இவற்றைச் சார்ந்து நில்லாமல் நடு நிற்றல் நடுவு நிலைமையாம்.

(திருக். 119. ப. உ)

நத்தம்: 'நந்து' என்பது உயர் என்னும் பொருட்டாய தனிவினைப் பெயர். அஃதப் பொருட்டாதலை "பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் - வரிசை வரிசையாய் நந்தும் (நாலடி.125) என்புழிக் காண்க. அது நத்து என வலித்தலாய் ‘அம்’

L