சொற்பொருள் நுண்மைவிளக்கம்
171
என்று மணிவாசகப் பெருமான் ஒரு தொடர் அருளிச் செய் திருக்கிறார். இதில், 'நாடகம் என்னும் சொல் ‘விளையாட்டு' என்னும் பொருளில் வந்திருக்கின்றது. 'நடித்தல்' என்பதே அதன் செயல் என்பதும் அத் தொடரில் இருந்தே தெரிகின்றது.
நடிப்பில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று கருத்துக்களை நடித்தல். இன்னொன்று கதைகளை நடித்தல். கருத்துக்களை நடித்துக் காட்டுவதற்கு நாட்டியம் என்றும், கதைகளை நடித்துக் காட்டுவதற்கு நாடகம் என்றும் பெயர் சொல்வதுண்டு. சங்க காலத்தில் இவ்விரண்டுமே கூத்து என்னும் பெயராலும் வழங்கி வந்தது. (சங்க நூற் கட்டுரைகள். I. 94)
நாடு: நாடு என்னும் சொல்லுக்கு ‘விரும்பு’, ‘தேடியடை என்னும் பொருள்கள் உள. ஆதலின் மக்கள் விரும்புவதற்குரிய இடம், தேடிவந்து தங்குவதற்குரிய இடம் எதுவோ அதுவே நாடாகும். வளமற்ற வறண்ட வெற்றிடம் நாடாகும் தகுதியினை (இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல். 13.)
உடை
யதாகாது.
நாடுகாவல்: நாடுகாவல் என்னும் வரி பாடிகாவல் எனவும் வழங்கும். இஃது ஊர்களைக் காத்தற்கு வாங்கிய ஒரு தனி வரியாகும். (முதற் குலோத்துங்க சோழன். 88) நாடுதல்: நாடுதல் - மனத்தால் ஆராய்தல்.
(திருக்கோ. 253. பேரா.)
நாண்: (1) பழி பாவங்களின் மடங்குதல். (திருக். 951. பரி.) (2) இழி தொழில்களில் மனம் செல்லாமை.(திருக். 502. பரி.) (3) நாண் என்பது பெண்டிர்க்கு இயல்பாக உள்ளதொரு தன்மை. (இறையனார். 2. நக்.)
நாய்: நாய் என்ற சொல் நா என்பதன் அடியாகப் பிறந்தது என்று காரணம் காணும்போது அழகுபட உள்ளது.
நால்கு: (1) நான்கு நால்கெனப் பெயர்த் திரிசொல்.
(மு. வ; மொழிவரலாறு. 56.)
(பெரும்பாண். 489. நச்.)
(2) நான்கு, பெயர்த் திரிசொல் என்பர் நச்சினார்க்கினியர் (பொருநர். 165.) ‘பால்வுரை புரவி நால்குடன் பூட்டி’ என்பதன் (அகம். 104. வேங்கட விளக்கு.)
உரை காண்க.