190
இளங்குமரனார் தமிழ் வளம் – 3
(3) பர என்னும் சொற்கு விரிந்துசெல், பரவிச்செல் நீண்டுசெல் என்பது பொருள். இதன் ஆணிவேர்ச்சொல் பர்” என்பது. இச்சொல்லடியாகப் பிறக்கும் சொற்கள் சில வருமாறு:
பரப்பு, பரவை = கடல்; பரம்பு அடித்தல் = உழுத நிலத்தை பரவும்படி செய்தல். பரத்தை என்பவள் ஒருவனுக்கென இல்லா மல் பரந்துபட்ட வாழ்க்கையினள். பர் என்ற வேர்ச்சொல் அடியாகப் பிறந்தவைகளே பரப்பு, பரத்த, பரத்தை, பரவை, பரம்பு, பாரி, பார், பார்வை, பாரித்தல் முதலிய சொற்கள்.
(வள்ளுவர் வழங்கும் மொழிநூல்.) பரதவர்: தென்திசைக்கண் குறுநில மன்னர். அது, “தென் பரதவர் மிடல்சாய, வடவடுகர் வாளோட்டிய” (புறம். 378) (புறம்.378) என்னும் புறப்பாட்டானும் உணர்க். (மதுரைக். 144. நச்.)
பரவன்:
-
பரவை- கடல். பரவன் கடலன். கடலருகில் வாழ்பவன், கடலில் வாழ்பவன், கடலைக்கொண்டு வாழ்பவன் பரவன் எனப் பெயர் பெற்றான். (தமிழர் நாகரிகமும் பண்பாடும். 13.) பரவுதல்: (1) பரத்தில் உணர்வு பயிலும் நிலையில் வழி (திருவருட்பா விரிவுரை. நெஞ்சறி. 4.)
படுதல்.
(2) பரவுதல், இறைவன் புகழை வாயாற் பாடுதல். தொழு தல், அவனை உடலால் வணங்குதல். பேணுதல், மனத்தால் விரும்புதல். ஆவது அவனை இடை டையறாது நினைத்தல்.
(குறிஞ்சிப்பாட்டு விளக்கம். 25.)
பரவை: கடலின் பரப்பு இந்நிலத்தின் பரப்பைவிட மும் மடங்கு பெரிதாயிருக்கின்றது. ஆனதனால் தமிழ் மக்கள் அதனைப் ‘பரவை’ என்று வழங்கி வருகின்றனர்.
(சிறுவர்க்கான செந்தமிழ். 31.)
பராரை: பரு அரை மரம்; இயல்பான பேச்சுமுறையில் பேசும் சொல் போன்று இதன் ஓசை அமைந்துள்ளது. இதற்கு மனத்தை இழுக்கும் ஆற்றல் இல்லை. ஒரு தோற்றத்தைத் தரும் ஆற்றலும் இல்லை. இதே பொருளைப் பாருளைப் 'பராரை என்று சொல்லும்போது இதற்கு மனத்தை இழுக்கும் அல்லது தன்னைக் கருதச் செய்யும் ஆற்றல் ஏற்படுகிறது. இது மட்டுமா? ஒரு பருமை பெற்ற தோற்றத்தையும் மனத்திற்குக் காட்டுகின்றது. பராரை என்ற சொற்றொடர் தருகிற தோற்றம் வேறு. பரூஉ அரை என்ற சொற்றொடர் தருகிற தோற்றம் வேறு. ஆகார ஓசை