உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

(3) பாண்டில் பண்டியெனவும் வண்டி எனவும் இக் காலத்து வழங்கப்படுகின்றது. (நற்றிணை. 183. அ. நாராயண.)

பாப்பா: பார்ப்பு (பறவைக்குஞ்சு) என்ற சொல் பாப்பா எனக் குழந்தையை உணர்த்தி அது ஒரு சிலரின் இயற்பெய ராகவும் வழங்கத் தொடங்கிவிட்டது. (மொழியியல். 279. மு.வ.) பாம்புரி: (1) கீழே புறப்படப்படுத்தது. (சீவக. 1250. நச்.)

(2) மதிலின் அடியில் உள்ள ஆளோடிகள். (சீவக. 1444, நச்.) பாயிரம்: (1) பாயிரம் என்றது புறவுரையை. நூல் கேட் கின்றான், புறவுரை கேட்கிற் கொழுச் சென்றவழித் துன்னூசி இனிது செல்லுமாறுபோல, அந்நூல் இனிது விளங்குதலில் புறவுரை கேட்டல் வேண்டும். (தொல். சிறப்புப்பாயிரம். நச்.)

(2) பாயிரம் என்ற சொற்குப் பொருள் யாதோ எனின் புறவுரை என்றவாறு. ஆயின் நூல்கேட்பான் புகுந்தே நூல் கேளாது புறவுரை கேட்டு என்பயன் எனின், நூற்குப் புறனாக வைத்தும் நூற்கு இன்றியமையாதது ஆதலின் என்க. என் போலவோ எனின், கரு அமைந்த மாநகர்க்கு உரு அமைந்த வாயில் மாடம் போலவும், அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்க மாகிய திங்களும் ஞாயிறும் போலவும், தகைமாண்ட நெடுஞ் சுவர்க்கு வகைமாண்ட பாவை போலவும் என்பது.

(இறையனார். 1. நச்.)

பார்ப்பார்: பார்ப்பார் என்பது குலம்பற்றி வந்தது அன்று. தொழில்பற்றி வந்தது. பார்ப்பார் என்றால் ஆராய்வார் என்று பொருள்படும். நூல்களை ஆராயும் தொழிலில் ஈடுபட்ட அறிஞர்கள் பார்ப்பார் என்று அழைக்கப்பட்டிருத்தல் வேண்டும். (தொல்காப்பிய ஆராய்ச்சி. 188.)

பார்ப்பான்: பார்ப்பான் என்பான் நன்றும் தீதும் ஆராய்ந்து உறுதி கூறுவான் எனப்படும். (தொல். பொருள். 501. பேரா.) பார்வல்: பார்வல் - அரசர், தம் பகைவர் சேய்மைக்கண் வருதலைப் பார்த்திருத்தற்குரிய உயர்ச்சியை உடைய அரண் ஆகுபெயர். (மதுரைக். 231. நச்.)

பாலை: பாலை என்பது பிரிவு. பாலையில் பால் என்பதே வேர்ச்சொல். பால் என்றாலு பகுப்பு, பிரிவு எனப் பொருள்படும். ஆண்பால், பெண்பால் என்ற சொல்லதிகாரச் சொற்கள் ஆண் பிரிவு, பெண் பிரிவு என்று பொருள்படுவன. ஆவின்பால்