உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

LO

5

பொற்றை' ‘பொச்சை' என்றும்; மலைப்பக்கத்தைச் ‘சாரல்’ என்றும் பழைய தமிழ் நூல்கள் கூறா நிற்கும் என மறைத் திரு.மறைமலையடிகளார் கூறும் விளக்கத்தில் 16 சொற்களும் 17 விளக்கங்களும் அமைந்திருந்தாலும் சொல் ஒன்றாகவும் விளக்கம் ஒன்றாகவுமே இந் நூற்கண் எண்ணப் பெற்றதாம். (மலை காண்க.)

-

இனி, "இரவும் பகலும் அல்லது பகலும் இரவும் கலக்கும் இடைவேளையே காலவகையில் அந்தி எனப்பட்டது. காலையில் நிகழ்வது காலை அந்தி என்றும், மாலையில் நிகழ்வது மாலை அந்தி என்றும் சொல்லப்பெறும்.

66

'காலை அந்தியும் மாலை அந்தியும்”

புறம்.34

காலை அந்திக்கு முன்னந்தி, வெள்ளந்தி என்றும், மாலை அந்திக்குப் பின்னந்தி, செவ்வந்தி என்றும் பெயருண்டு.

--

அந்தி என்னும் பொதுச் சொல் சிறப்பாக ஆளப்பெறும் போது மாலை அந்தியையே குறிக்கும் என்பது அந்திக்கடை அந்திக் காப்பு, அந்தி மல்லிகை, அந்தி வண்ணன், அந்திவேளை முதலிய சொல்வழக்கால் அறியப்பெறும்.

இட

வகைாயல் அந்தி என்பது முத்தெருக்கள் கூடும் டத்தைக் குறிக்கும்.

66

“அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும்’

- சிலப். 14: 213.

பிற்காலத்தில் அந்தி என்னும் சொல் சகர மெய் முன்னிடப்

பெற்றுச் சந்தி என்றாயிற்று.....

சந்து - பொருத்து. தொடைப் பொருத்து (இடுப்பு) இரு பகைவர் பொருந்துதல். “இருவருக்குஞ் சந்துசொல்ல

சந்து - சந்தை; பலகடைகள் கூடுமிடம்

99

சிலப். 8:101 உரை.

என்று மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் அந்தி என்னும் ஒரு சொல்லை 15 தொடர்ச் சொற்களாலும் எடுத்துக் காட்டுக் களாலும் விளக்கியுள்ளது போன்றவற்றைச் சொல்லும் விளக்கமும் ஒவ்வொன்றாகவே இந்நூற்கண் கொள்ளப் பெற்றதாம். (‘அந்தி’ -

காண்க.)

இனி, ‘அமிழ்தம்' என்னும் வள்ளுவச் சொல்லை எடுத்துக் கொண்டு, “மிருத என்னும் வடமொழி மரணத்தைக் குறிக்கும்

-