உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

படை .

இளங்குமரனார் தமிழ் வளம் 3

பிண்டிபாலம்: தலையிலே பீலி கட்டப்பட்டு எறிவதொரு (சீவக. 2269. நச்.)

பிணி: (1) நோய், பிறவிப்பிணி, பசிப்பிணி, பிணித்தல் - கட்டுதல். ‘பிணித்த புன்சடையன்' என்றனர் திருஞான சம்பந்தர். சுந்தரரும் ‘பிணியார் சடையர் மயானத்து' என்றுளார்.

(செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 6:239.)

(2) பிணியாவது நோய்; உடம்பின் உறுப்புக்களைத் துன்பமின்றி இயங்க வொட்டாமல் கட்டிவைத்தாற் போலச் செய்தலின் அஃது அப்பெயர் ஆயிற்று. (திருக்குறள். தண்ட. 227.)

பிணையல்: மலர் நெருங்கு மார்பின் மாலை; சூ சூட்டு நெற்றிக் கட்டு. கண்ணி- முடிக்கு மாலை. (சீவக. 193. நச்.)

பித்திகம்: பித்திகம் மாரிக் காலத்தே தழைத்து அக் காலத்து அந்தியில் மலர்வது. அதன் மலரின் புறம் சிவப்பா யிருக்கும். இதுவே பிச்சி என்று வழங்கப் பெறுவது.

(அகம். 42. வேங்கட விளக்கு.)

பிரப்பு: அரிசி, தினை முதலியவற்றைப் பல பகுதியாகக் கூடையிலாதல், முறத்திலாதல் பலியாக இட்டு வைத்தல். ‘பல்பிரப் பிரீஇ' என அகத்திலும் (242) ‘தினைப் பிரப் பிரீஇ' எனக் குறுந்தொகையிலும் (293) 'குருதியொடு விரைஇய தூவெள் ளரிசி, சில்பலிச் செய்து பல்பிரப் பிரீஇ' எனத் திருமுருகாற்றுப் படையிலும் (233-234) வருதல் காண்க.

(அகம். 98. வேங்கட விளக்கு.)

பிழி: கள், பிழியப் படுவது என்னும் பொருட்டு.

(அகம். 102. வேங்கட விளக்கு.)

பிழைத்தல்: பிழைத்தல் - இத் தொழிற் பெயர் தப்பித்துக் கொள்ளல், தப்பிதஞ் செய்தல் என்ற இயைபுடைய இரண்டு பொருள்களுடன் உயிர் வாழ்தலையும் குறிக்கும். உயிர் வாழ் தலுக்கும் தப்பித்துக் கொள்ளலுக்கும் ஏதாயினும் ஒற்றுமை யுண்டோ என்ற வினா இதனால் பிறக்கிறது. இதுவே இங்கு நாம் தூக்க வேண்டியது. மிகக் கொடிய பிணிவாய்ப் பட்டான் ஒருவன் அதிலிருந்து மீள்வானாயின் ‘அவன் பிழைத்துக் காண்ட ான் என்று மக்கள் கூறுவதை எப்போதுங் கேட்கிறோம். து வழக்கமாய் பேசும் பேச்சானமையின் இடத்திற்கேற்ற மொழி இடரின்றி அமைந்து நிற்கிறது.

و,