214
இளங்குமரனார் தமிழ் வளம் – 3
3
பே
பேடி: பெண்ணியல்பு மிக்கு ஆணியல்பும் உடையவள்.
(திருக். 727. பரி.)
பேதைமை: பேதைமை என்பது அறிவின்மை.
(தொல். பொருள். 252. பேரா.)
பேய்: (1) ஒருவன் இருண்டவேளையில் ஒரு தோற்றத்தைக் கண்டு அரண்டு குழறும் ஒலியினின்று பே (பேபே) என்னும் ஒலிக்குறிப்புத் தோன்றியுள்ளது. 'பேபே' என்று உளறுகிறான் என்பது வழக்கு. பே-பேம்-அச்சம்.
பே-பேய்= அஞ்சப்படும் ஆவி அல்லது தோற்றம்.
(முதல் தாய்மொழி. 9.)
(2) நுண்ணுடம்பில் நிற்கும் ஒருவகை உயிர். இது கண் டார்க்கு அச்சத்தைத் தருதலின் அப்பெயர் பெற்றது. பேம் - அச்சம். (திருவாசக விரிவுரை. சிவபுராணம். 26-31. மறைமலை.) பேராண்மை: எவ்விடத்தும் நிலைகுலையாத திண்மை யான் உளதாதல் பற்றிப் பேராண்மை எனப்பட்டது.
(திருக். 962. பரி.)
பேழ்கணித்தல்: பேழ்கணித்தல் = விழித்தல். இச்சொல் ஓர் அரியபொருளைக் காலத்தே கொள்ளாது கையிழந்தவன் அடையும் மெய்ப்பாட்டைத் தெரிவிப்பது.
-
(செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 2-82.)