216
இளங்குமரனார் தமிழ் வளம் – 3
3
பொ
பொங்கடி: யானை;
யாவற்றினும் பெரிய
பெரிய அடியை
யுடையது.
(அகம். 44. வேங்கட விளக்கு.)
பொச்சம்: கவர்+பு= கப்பு எனவும், உவர்+பு= உப்பு எனவும் விகாரப்பட்டு முடிந்ததுபோலப் பொய்+சு என்பனவும் விகாரப் பட்டுப் பொச்சு என முடிந்து பின்னர் அம்முப் பெற்றுப் பொச்சம் என நிற்பது ஆயிற்று. கப்பு-பிளவு, கவருடையது. “கப்புடை நாவின் நாகர் உலகமும்”
-
உப்பு உவர்ப்புடையது.
(கம்பர்)
(செந்தமிழ். 11-80)
பொச்சாப்பு: (1) கடைப்பிடியின்றி நெகிழ்ந்திருத்தல்.
(தொல். பொருள். 274. பேரா.)
(2) பொச்சாப்பு என்பது அற்றப்படுதல்; அஃதாவது பாதுகாத்துச் செல்கின்ற பொருட்கண் யாதானும் ஓர் இகழ்ச்சி யான் இடையறவு படுதல். (தொல். பொருள். 260. பேரா.)
(3) பொச்சாப்பு என்பதற்குச் சூடாமணி நிகண்டுக் காரர் மறத்தல் என்பர். பிங்கல நிகண்டுக்காரர் குற்றம் என்பர். தொல் காப்பியர் பொச்சாப்பு என்பது அற்றப்படுதல்; அஃதாவது பாதுகாத்துச் செல்கின்ற பொருட்கண் யாதானும் ஒரு நிகழ்ச்சி யான் இடையறவு படுதல் (மெய்ப்பாட். 12.) பொச்சாப்பு - கடைப்பிடியின்றி நெகிழ்ந்திருத்தல் (மெய்ப்பாட். 26.) என்பர்.
(செந்தமிழ். 11.79)
(4) விம்மல்+ஆப்பு= விம்மாப்பு எனவும், ஏமம்+ஆப்பு= ஏமாப்பு எனவும் புணர்ந்து நின்றதுபோலப் பொச்சம்+ ஆப்பு=பொச்சாப்பு எனப் புணர்தல் ஆயிற்று....... பொச்சம்- பொய்யுடையது. பொய் - உள்ளீடு இல்லது, பொந்து போன் றிருப்பது. பிங்கல நூலாரும் பொய் என்பதனை மரப்பொந்தின் பெயர்களுள் ஒன்றாக வைப்பர். ஆப்பு ஆதல். “சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்புடைத்து” (திருக்குறள்) என்புழி ஆப்பு
-