உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

221

போ

போ: போ என்பது போகல், போதரல், போய், போந்து, போதர, போத, போன, போந்த, போயின முதலியனவாய் வரும். போ என்பதினின்று போகல் போக்கு முதலிய பெயர் பிறக்கும். போக்கு - குற்றம். (செந்தமிழ். 11: 121.) போட்டி: இகல் பகையால் இடும் போட்டி; இசல் விளை யாட்டாக இடும் போட்டி; வீம்பு வம்பிற்கு இடும்போட்டி.

போது: பேரரும்பு.

(சொல். கட். 59) (திருக்கோ. 174. பேரா.)

போர்: போர் என்னும் பெயர்ச் சொல் காரண இடு குறிப் பெயராக வழங்கப்படுகிறது. பிறமொழிகளில் போரைக் குறிக்கும் பெயர்களுக்குச் சிறப்பாக வேறு ஒரு பொருளும் அமைந்திருப்பதாகத் தெரியவில்லை. தமிழில் போர் என்னும் சொல் 'பொரு' என்னும் வேர்ச்சொல் அடியாகப் பிறந்த பெயர்ச் சொல். பொரு அல்லது பொருவுதல் என்பதற்கு ஒப்புதல் ஒத்திருத்தல் என்று பொருள். அதனால் ‘பொருநன் என்பதற்கு, "தனக்குப் பிறர் உவமம் ஆவதன்றித் தான் பிறர்க்கு உவமிக்கப்படுவான்” என்று நச்சினார்க்கினியர் உரை எழுதி யிருக்கிறார். ஆகவே போர் என்னும் சொல் ஒத்திருத்தல் என்னும் பொருளைத் தன்னகத்து அடக்கி நிற்கிறது. இதில் இருந்து தமிழர்களுடைய போர் துறையைப் பற்றிய ஓர் அரிய செய்தி வெளியாகலாம். தமிழ்மக்கள் ஒத்த திறல் உடையாரையும் ஒத்த படை உடையாரையும் எதிர்த்துப் பொருவதே போராகும் என்ற கொள்கையுடையார். (தமிழ் உள்ளம். 42.)

போற்றுதல்: போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரி

யாமை.

(கலி. 133)