உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

3

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

நூல்கள் ஆரணம் என்றும் பெயர் பெறும். அருமை ஆகிய அரணம் என்பதே ‘ஆரணம்' என்று ஆயிற்று, ஆருயிர் என்பது போல. ஆகவே ஆரணம் மறை என்பன ஒரு பொருள் குறித்த காரணச் சொற்களாகும். தீய நினைவுகளும், தீய சொற் களும், தீய செயல்களும் ஆகிய படைக்கலங்கள் வந்து பாய்ந்து கொல்லாதவாறு தடுத்து நின்று மறைத்து உயிரைக் காப்பதே மறை” என்க. (பதினெண் கீழ்க்கணக்குச் சொற்பொழிவுகள். 1-2)

(5) மறை என்று வருமிடமெல்லாம் வேதம் எனப் பொருள் கூறுதல் பிற்கால வழக்கமாகும். வேதம் என்னுஞ் சொல் அறிவுறுத்துவது என்னும் பொருளிலும், மறை யென்னுஞ் சொல் மறைந்த நுண் பொருள்களைத் தன்னகத்தே கொண் டுள்ளது என்னும் பொருளிலும் வழங்குதலால் அவ்விரு சொற் களுள் ஒன்று மற்றொன்றின் மொழி பெயர்ப்பாதல் இயலாது. (தமிழிலக்கிய வரலாறு. தொல்காப்பியம். 119)

மறைமொழி: ‘மறைமொழி - புறத்தார்க்குப் புலனாகாமல் மறைத்துச் சொல்லும் சொற்றொடர்' என்பார் பேராசிரியர். இனி, மறைமொழி என்பதற்கு நிறைமொழி மாந்தரது ஆணை யின் ஆற்றல் அனைத்தையும் தன்னகத்தே மறைத்துக் கொண் டுள்ள மொழி எனப் பொருள் கொள்ளுதலும் பொருந்தும்.

(தொல்காப்பியம் நுதலிய பொருள். 264.) மன்றம்: (1) அரண் இல்லாத வீடு. (சிலப். 23: 46. அரும்பத (2) ஊர்க்கு நடுவாய் எல்லாரும் இருக்கும் மரத்தடி.

(முருகு. 226. நச்.)

மன்றாடுதல்: நீதி மன்றத்திற் சென்று வழக்காடுதலை மன்றாடுதல் என்பர். இப்பொழுதும் மன்றாடி வேண்டிக் கொள்கிறேன் என்ற வாசகம் வழங்கக் காணலாம்.

(தமிழ் விருந்து. 126.)

மன்னர்: மக்களாற் செய்யப்படும் உழவுக்கும், பிற தொழிலுக்கும் காவல் செய்யும் கருத்தினால் நாளடைவில் உருவாகி நிலைபெற்ற குடும்பமே மன்னர் குடும்பமாகும். மன்னன் என்னும் பெயர் நிலைபெறுதல் என்னும் பொரு ளுடைய 'மன்' என்னும் உரிச்சொல்லின் அடியாகப் பிறந்த காரணப் பெயராகும். மக்களது நல்வாழ்வு நிலைபெற அவர்கள் வாழும் நாட்டை நிலைபெறக் காக்குங் கடமை பூண்ட ஆட்சித் தலைவன் மன்னன் என நன்கு மதித்துப் போற்றப் பெறு