236
இளங்குமரனார் தமிழ் வளம் – 3
மு
முக்கோல்: இறை, உயிர், உலகு என்னும் மூன்றும் மயங்கிய மயக்கமே உலகம் என்பதற்கு அறிகுறியாக மூன்று கோலை முறுக்கிச் செய்ததொரு கோல். இது துறவோர்க்குரியது. இனி, அறம், பொருள், இன்பம் மூன்றற்கும் அறிகுறியாகிய கோல் எனலுமாம். (கலி. 9. விளக்கம். பெருமழை.)
முகம்: முனைமுகம் வினைமுகம் என்னும் இடங்களில் முகம் என்னும் சொல் ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந் துள்ளது. வேற்றுமை உருபாகப் பயின்றுள்ள இச்சொல்லை ஆ ரிய மொழியினின்றும் வந்ததாகக் கூறுவது தவறு. முகம் என்பது தனித் தமிழ்ச் சொல்லே.(வள்ளுவர் வகுத்த அரசியல். 20-1.)
முகவை பாடுதல்: பொலி பாடுதல்; முகவை என்றார், நெல்லு முகந்து கொடுக்கப் படுதலாலே; புகர் முக முகவை (புறம். 371) CLITOU. (சிலப். 10: 137. அரும்பத.)
முட்டுதல்: முட்டுதல், உடம்பால் தீண்டுதல். தாக்குதல், கோல் முதலிய கருவிகளால் தீண்டுதல்.
(குறுந்தொகை. 28. உ. வே. சா.)
முடங்கர்: முடக்கமான இடம். (அகம். 147. வேங்கட விளக்கு) முடங்கு இறை: கூடல்வாய் ; கூரையின் இரு பகுதிகள் ஒன்றோடு ஒன்று பொருந்தும் மூட்டுவாய்.
ரு
(மறைமலை. முல்லை. ஆரா. 75.)
-
முத்தம்: முட்டு முத்து முத்தம். (முக்த > வடமொழி) ஆமணக்கு குருக்கு முதலியவற்றின் விதைகள் முட்டி வெடிப்ப தால் முதலாவது முத்தெனப் பட்டன. அவ் விதைகள் போற் சிப்பிக்குள்ளிருக்கும் மணியும் முத்து எனப்பட்டது.
(புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 358.)
முத்தி: முத்தியாவது எங்கும் ஒக்க வியாத்தியை (நிறைந்
திருத்தலை) அடைந்திருத்தல்.
(திருக்கோ. 197. பேரா.)