240
இளங்குமரனார் தமிழ் வளம் – 3
(முல்லைமாறி) என வழக்கில் வையக் கேட்கின்றோம் (அறிவன் முல்லை, கணிவன் முல்லை, இல்லாண் முல்லை, மூதின் முல்லை என்பன புறத்துறைகள்.) (தொல்காப்பிய புதுமை. 77.)
-
-
(2) கல் கால், கொலை, கலை; தொல் தொலை; கொல், என்றாயது போன்று முல் - முலை என்றாயிற்று. பெண்ணின் அழகு, உயர்வு, இயல்புகளை மிகுதிப்படுத்தும் உறுப்பாதலால் முலை எனப் பெயரிட்டனர். முலையிலாள் பெண் காமுற்றற்று என்ற வள்ளுவர் வரியும் இதனை வற்புறுத்தும்.
எனவே ‘முல்' என்பதே வேர்ச்சொல். பெருங்கதையில் ‘முல்' எனும் சொல்லடியாக முல்லான் என்று சொல்லாக்கி யுள்ளதைக் காணலாம்.
அகப்பொருளிலே முல்லை என்பது அன்பு, கற்பு முதிர்ந்து மிகுதிப்பட்டிருத்தல் எனப் பொருள்படும். முல்லைத்திணை இல்லறத்தின் தனிப்பெருஞ் சிறப்பை எடுத்துக்காட்டுவதாகும். மணமக்கள் பிரிவால் உளதாகும். வருத்தத்தைத் தாங்கி ஒருவரை ஒருவர் நினைத்து ஏங்கி அன்பு மிகுதிப்பட்டிருத்தலும் அதன் நிமித்தமும் முல்லையாகும். (அகத்திணைத் தெளிவு.
முழுத்தம்: பொருத்தங்கள் முழுதும் பொருந்திய பொழுது தான் முழுத்தம். பிறரால் முகூர்த்தம் எனத் திரித்து வழங்கப் பெறுகின்றது. (புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 244.)
முழுமை: இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்றமுதிர்தல்.
(ஐங்குறு. 5. ஒளவை. சு. து.)
முளமா: (1) முளமா - முட்பன்றி. இது பெரும்பான்மையும் முளவுமா என்றே வழங்கப்படுதலின் முளமா என்புழி நிலை மொழி ஈறுகெட்டதென்றே கொள்ளல் வேண்டும். இதனை முள்ளம்பன்றி என்று இக்காலத்தார் வழங்குப.
(ஐங்குறு. 364. விளக்கம். பெருமழை.)
(2) முள்ளையுடைய விலங்கு 'முளவுமா' என்றழைக்கப் பட்டது. எய் என்றும் எய்மான் என்றும் சங்க நூல்களில் அழைக்கப்படும். முள்ளம்பன்றியின் மேற்புறத்தில் கழுத்தில் இருந்து தொடங்கி நீண்ட முட்கள் உள்ளன. இதை ‘எய்ம்முள்’ என்று சங்க நூல்களில் அழைப்பர். நீண்ட கோலின் நுனியில் இரும்பு முள்ளைச்செருகி எறிவதற்காகப் பயன்படும் ஊசியை எறியூசி என்பர். இந்த எறியூசியை எய் என்றும் அழைப்பர்.